என் மலர்
செய்திகள்

வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது: எச்.ராஜா
புதுக்கோட்டை:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 16 பேர் சைக்கிளில் அமைதி பேரணியாக சென்றனர்.
பேரணியை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:–
ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள பிரச்சினைக்கு காரணம் காங்கிரஸ் தான். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புர்கான்வானி ராணுவத்தால் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியாக ஜம்மு இருப்பதால் ராணுவத்திற்கு என்று ஒரு சில சட்ட விதிகளும் அனுமதியும் உள்ளன.
இன்றைக்கு கருணாநிதியோ, ப.சிதம்பரமோ மற்றும் சில உதிரி கட்சி தலைவர்களும் இரவில் நன்றாக தூங்குகிறார்கள் என்றால் அது ராணுவத்தின் தியாகமே காரணம். அப்படி இருக்கும் போது கருணாநிதி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் இந்திய ராணுவத்திற்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்துவதும், ராணுவத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதும் தேச விரோத செயலாகும்.
யாரும் ராணுவத்திற்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. குறிப்பாக ப.சிதம்பரம் ராணுவத்திற்கு எதிராக பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுப்புணர்வோடு பேச வேண்டும். யாராக இருந்தாலும் காவல்துறை லாக்கப்பில் தாக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது ஒரு மனித உரிமை மீறலாகும்.
மேலும் மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய நபர் குறித்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய பெருமாள்முருகன் போன்ற வர்களால் தான் சமுதாயத்தில் கீழ்தரமான சிந்தனைகள் வளர்ந்து வருகிறது. இவர்கள் போன்றவர்கள் எழுதிய கதைகளை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி புத்தகத்தை தடை செய்ய வேண்டும்.
வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வக்கீல்களின் போராட்டத்தால் அவைகள் மீண்டும் அதிகரிக்க கூடும். ச ட்ட திருத்தம் குறித்து ஒரு வேறு கருத்துக் கள் நிலவுகின்றன.
ஒரு சிலர் வரவேற் கின்றனர். ஒரு சிலர் எதிர்க்கின்றனர். எனவே அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். வக்கீல்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






