என் மலர்
புதுக்கோட்டை
தொழிற்சங்களை அழைத்து பேசாமல் மரபுகளை மீறி தன்னிட்சையாக போனஸ் அறிவித்து உள்ளதை கண்டித்தும், போனஸ் உச்சவரம்பு சட்டப்படி தினக்கூலி உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடை பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 26.09.2016 அன்று முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இதில் அறந்தாங்கி, ஆவுடை யார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் துரையரசபுரம் அரசினர் பல்தொழில்நுட்ப கல்லூரி, பெருநாவலூர் ஊராட்சி, கல்லனேந்தல் விளக்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரி கல்லூரி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் அறந்தாங்கி, ஆவடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் பெறும் இடம், விண்ணப்பம் வழங்கும் இடம், வாக்காளர் பட்டியல் விற்பனை செய்யு மிடம், வழங்கப்படும் விண்ணப்பங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் பார்வையிடப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தவும், வாக்குகளை விரைவாக எண்ணும் வகையில் அதிக மேஜை மற்றும் நாற்காலி வசதிகள் ஏற்படுத்தவும், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் வேட்பு மனுக்களை சரிபார்த்து வாங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வேட்பாளர்கள் பொதுகூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமானால் காவல்துறையினரிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொய்யாமொழி செல்வராஜ், திலகவதி, தமிழ்ச்செல்வன், வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
திருமயம்:
திருமயம் சந்தைபேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னையில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெய மாலதி. இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி விட்டு வராண்டாவில் இருந்த ஜெய மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி ஊராட்சி வடக்கிப்பட்டியில் கால்நடை மருத்துமனை கட்டிடப்பணி நடந்து வருகிறது. தற்போது பவுண்டேசன் அமைக்கப்பட்டு பில்லர் வரை பணிகள் நடந்துள்ளது. இந்த கட்டிடத்தை அந்த இடத்தில் கட்டக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுமானப் பணியினை வடக்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து சேதபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இலுப்பூர் கால்நடை பராமரிப்பு துணைஇயக்குனர் தேவதாஜ் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி கட்டிடத்தை இடித்து சேதபடுத்தியதாக வடக்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 47), வீராச்சாமி (64), ஜேசிபி டிரைவர் கே.இடையபட்டி வெள்ளத்துரை,கொண்டபாளையம் கோபி கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இரு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி ஆகிய சுற்றுவட்டார தாலுக்காவில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசன நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு தேவையான தண்ணீரை 168 ஏரிகளில் சேகரிக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 24-ந்தேதி கல்லணை கால்வாயும் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியான புதுக்கோட்டை நாகுடி பகுதிக்கு இன்று அதிகாலை வந்தது. காவிரி நீரை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் கோட்ட நாகுடி உதவி பொறியாளர் புஷ்பராணி, புதுக்கோட்டை கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கணேசன், முன்னாள் அறந்தாங்கி ஒன்றியக்குழு தலைவர் சுப்பையா, விவசாய சங்க பிரதிநிதி செல்லப்பன், வீரப்பன், நிர்வாகிகள் கழுகுமலை செல்வம் ஆகியோர் பொங்கி வரும் புதுவெள்ளத்தை மலர் மட்டும் நெல்மணிகளை தூவி வரவேற்றனர்.
பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட நீர் கடைமடை வரை வந்து சேர்ந்தது. நேரடி நெல் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீரில் அடித்து வரப்பட்ட மரங்கள், குப்பை கூழங்களை பொதுப் பணித்துறை ஊழியர்கள் அகற்றி நீர் விரைவாக செல்ல ஏதுவாக வழிவகை செய்தனர்.
புதுக்கோட்டை:
நமணசமுத்திரம் அருகே உள்ள சிவபுரத்தைச் சேர்ந்தவர் திருவேங்கட பிரசாத். இவர் தனியார் கல்லூரி மாணவர். இவர் புதுக்கோட்டை நரிமேட்டுப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடையில் இருந்த பாண்டியன், காசி ஆகியோருடன் வாய் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
பின்னர் பிரசாத் சிவபுரம் வந்து விட்டார். இந்த சம்பவத்தால் ஆத்தரமடைந்த பாண்டியன், காசி இருவரும் சிவபுரம் வந்துள்ளார். அங்கிருந்த திருவேங்கிட பிராசாத்தை தாக்கினர். இதில் திருவேங்கிட பிராசாத் பலத்த கயமடைந்தார்.
இதுகுறித்து திருவேங்கிட பிராசாத் நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருமயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
திருமயம் நீதிபதி இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கலெக்டர் கூறியதாவது -
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி சாதாரண தேர்தல்கள் 17.10.2016 மற்றும் 19.10.2016 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற வுள்ளது. அதனடிப்படையில் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 26.09.2016 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம், குன்றாண்டார்கோவில், விராலிமலை மற்றும் அன்ன வாசல் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வேட்பு மனு தாக்கல் பெறப்படும் இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலுப்பூர் ஆர்.சி தொடக்கப் பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப் பெட்டிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு பெறப்பட்ட மனுக்கள் விபரம், தேர்தல் பணிகள், வாக்காளர் பட்டியல் விற்பனை விபரம், போன்ற பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் தனித்தனியாக சென்று வரும் வகையில் தடுப்புக்கட்டைகள் அமைக்கவும், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை சரிபார்த்து வாங்கவும், வாக்குப்பெட்டிகளை முழுப்பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்பஞ்சவர்ணம் (மாவட்ட வழங்கல் அலுவலர்), ஜெயபாரதி (உதவிஆணையர், கலால்), வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஷியம், விஜயநாதன், சுப்பிரமணியன், நாகராஜன், உதயக்குமாரி, பேரூராட்சி செயல் அலுவலர்சுலைமான் சேட், வட்டாட்சியர்கள் தமிழ்மணி,சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அன்னிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் விற்பனை நடைபெறாமலும், மூடப்பட்டும் இருக்க வேண்டும்.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்படி நாளில் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவையாவும் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் கணேஷ் தெரிவித்தள்ளார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் மதுபான பார்களில் மதுவுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 2613 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபானங்களை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கியில் உள்ள சில டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த மதுபானங்கள் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அறந்தாங்கி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு செல்லபாண்டியன், இன்ஸ்பெக்டர் பால முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீசார் அறந்தாங்கியை அடுத்த மெரினா நகரில் உள்ள குறிப்பிட்ட ஒரு வீட்டை திடீரென்று சோதனை இட்டனர். அப்போது அந்த வீட்டின் போர்ட்டிகோவில் ஒரு சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக அட்டை பெட்டிகளில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனை இட்டபோது ஒரு அறையில் ஏராளமான புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களில் காலி பாட்டில்கள், அந்த பாட்டில்களில் பொருத்தக் கூடிய மேல் மூடிகள் பெட்டி பெட்டியாக கிடந்தன. உடனே சரக்கு ஆட்டோ மற்றும் வீட்டின் உள்ளே இருந்த 2613 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள், காலி பாட்டில்கள், மூடிகள் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுபாட்டில்கள் பதுக்கல் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், அறந்தாங்கி துணை சூப்பிரண்டு செல்ல பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் விற்பனை ஆகும் பாட்டில் மதுபானம் சுமார் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அந்த மதுபான பாட்டில்களை மொத்தமாக தமிழகத்திற்குள் வாங்கி வரும் ஒருசில மதுபானக் கூட ஒப்பந்ததாரர்கள், ஒரு புல் பாட்டில் மதுவை, 4 குவார்ட்டர் பாட்டில்களில் நிரப்பி, அந்த பாட்டில்களில் லேபிள் ஒட்டி, மூடிவிடுகின்றனர். இந்த பாட்டில் அச்சுஅசல் மதுபான பாட்டில்களை போன்றே இருக்கும்.
இந்த குவார்ட்டர் பாட்டில்களை மதுபானக்கூடங்களில் ஒரு பாட்டில் சுமார் 80 முதல் 100 வரை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்வதால், மதுபானங்களை கடத்தி வருபவருக்கு ஒரு பாட்டிலுக்கு பாதிக்கு பாதி அதாவது 100க்கு 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. இதுபோன்றே அறந்தாங்கியில் உள்ள ஒரு சில மதுபானக் கூடங்களில் புதுச்சேரி மாநில மதுபானங்களை கலந்து விற்பனை செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அவ்வாறு கலந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கப்பட்ட மதுபான பாட்டில்களைத் தான் அறந்தாங்கி போலீசார் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.
விராலிமலை:
இலுப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் கணேஷ் அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போதுமான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் தாமதிக்காமல் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மனுதாரர்களுக்கு உத்தரவுகள் வழங்க வேண்டுமென்றும், அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமென்றும் அறிவுறித்தினார்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இ-பொது சேவை மையம், ஆதார் அடையாள அட்டை எடுக்கும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் தாசில்தார் தமிழ்மணி, இலுப்பூர் பேரூராட்சித்தலைவர் குரு.ராஜமன்னார் , செயல் அலுவலர் சுலைமான்சேட் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோங்குடி ஊராட்சி காஞ்சி ராயன்வயலை சேர்ந்தவர்கள் முத்து, ஆறுமுகம், உடையப்பன், சரஸ்வதி,வெள்ளைச்சாமி ஆகியோர் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று அவர்கள் தங்களது வெள்ளாடுகளை பச்சலூர் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர்.
மேய்ச்சல் முடிந்து அவர்கள் ஆடுகளை வீட்டில் உள்ள பட்டியில் அடைப்பதற்காக அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் ஓட்டிவந்தனர். ஆடுகள் கரையப்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது காரைக்குடி பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று காஞ்சிராயன்வயலை சேர்ந்தவர்கள் ஓட்டிவந்த வெள்ளாடுகள் மீது மோதியது. இதில் முத்துவிற்கு சொந்தமான 8 ஆடுகள், ஆறுமுகத்திற்கு சொந்தமான 6 ஆடுகள், உடையப்பனுக்கு சொந்தமான 6 ஆடுகள், சரஸ்வதி, வெள்ளைச்சாமி ஆகியோருக்கு சொந்தமான தலா 1 ஆடுகள் என மொத்தம் 19 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 3 ஆடுகள் படுகாயம் அடைந்தன. ஆடுகள் மீது மோதிய சொகுசு கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கார்மோதி ஆடுகள் பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் குவிந்தனர். மேலும் அவர்கள் ஆடுகள் மீது மோதிய காரின் ஓட்டுனரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாழக் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் சந்துரு (வயது 26). இவரது நண்பர்கள் அறந்தாங்கி கோட்டைப் பகுதியை சேர்ந்த சிவராஜ் (27), இந்திராநகர் சண்முகபாண்டியன் (25) கல்லூர் கிராமம் பிரபு (21). இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் பெயிண்டிங் வேலைக்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
வேலையை முடித்து விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பினர். குடிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்துரு மற்றும் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தனர். சண்முக பாண்டியன், பிரபு இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்...
இதே போல் புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவ நாதன். இவரது மகன்கள் சேகர் (24), சக்திவேல் (21), கட்டிடத் தொழிலாளர்கள். இவர்கள் வேலைக்காக கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதிக்கு சென்றனர். பின்னர் வேலையை முடித்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள மணியம் பள்ளம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






