என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதி அருகே கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை இடித்த 4 பேர் கைது
    X

    பொன்னமராவதி அருகே கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை இடித்த 4 பேர் கைது

    பொன்னமராவதி அருகே கால்நடை மருத்துவமனையின் கட்டிடப்பணியினை இடித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி ஊராட்சி வடக்கிப்பட்டியில் கால்நடை மருத்துமனை கட்டிடப்பணி நடந்து வருகிறது. தற்போது பவுண்டேசன் அமைக்கப்பட்டு பில்லர் வரை பணிகள் நடந்துள்ளது. இந்த கட்டிடத்தை அந்த இடத்தில் கட்டக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுமானப் பணியினை வடக்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினர் பொக்லின் இயந்திரம் மூலம் இடித்து சேதபடுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இலுப்பூர் கால்நடை பராமரிப்பு துணைஇயக்குனர் தேவதாஜ் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி கட்டிடத்தை இடித்து சேதபடுத்தியதாக வடக்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 47), வீராச்சாமி (64), ஜேசிபி டிரைவர் கே.இடையபட்டி வெள்ளத்துரை,கொண்டபாளையம் கோபி கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இரு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×