என் மலர்
செய்திகள்

திருமயத்தில் வீடு புகுந்து கொள்ளை
திருமயத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் சந்தைபேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னையில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெய மாலதி. இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி விட்டு வராண்டாவில் இருந்த ஜெய மாலதியின் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






