என் மலர்
புதுக்கோட்டை
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தீபாவின் கணவர் மாதவன் போராட்டத்தில் பங்கேற்று நேரில் ஆதரவு தெரிவித்தார்.
நெடுவாசல் போராட்டத்தில் இன்று தீபாவின் கணவர் மாதவன் பங்கேற்று ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த போராட்டம் 20 நாட்களாக வெற்றியுடன் நடைபெற்று வருகிறது. இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் மக்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்யக்கூடாது. ஒரு நிர்வாகத்தின் லாபத்திற்காக ஒரு கிராமத்தை வதைப்பது கண்டிக்கத்தக்கது.
இங்கு நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. 100 சதவீதம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த போராட்டத்தை கைவிடக்கூடாது. நானும் உங்களுடன் இருந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் என்றாலே வழியெங்கும் தரிசு நிலங்கள், நீரில்லா குளங்கள், பாறைகளால் ஆன மலைகள் என வறட்சிக்கான அடையாளங்களே பெரும்பாலும் நினைவுக்கு வரும்.
ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறது நெடுவாசல் பகுதி கிராமங்கள். இங்குள்ள சாலைகளின் வழிநெடுகிலும் பலா, தென்னை, தேக்கு மரங்கள், கரும்பு, கடலை, வாழை, நெல், உளுந்து உள்ளிட்ட பணப்பயிர்கள் காட்சியளிக்கின்றன.

இவை தவிர ஆங்காங்கே மல்லிகை, சாமந்தி, வாடாமல்லி, செம்பருத்தி உள்ளிட்ட மலர்ச்செடிகளும் பயிரிடப்பட்டுள்ளன.
நெடுவாசல் மட்டுமின்றி வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் பசுமைக்குப் பஞ்சமில்லை. ஆற்று நீருக்கு வழியில்லை என்றாலும், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் நீர் பாய்ச்சி ஆண்டுதோறும் முப்போகம் சாகுபடி செய்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.

ஓங்கி வளர்ந்த மரங்களை கொண்ட தோட்டம், அதற்கு நடுவில் வீடு என முற்றிலும் பசுமை சூழ்ந்த வாழ்க்கையைக் கொண்டுள்ள இந்த கிராமங்களில் தான் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிரான போராட்டங்கள் அங்கு வலுப்பெற்றுள்ள நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்த அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் நெடுவாசல் பகுதி கிராமங்களின் அழகையும், பசுமையையும் வியந்து பாராட்டி சென்றுள்ளனர்.
இந்தச் சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இங்குள்ள பசுமையான சோலைகள், பாலைவனமாக மாறிவிடும் என வேதனைப்படுகின்றனர் விவசாயிகள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
இன்று, நேற்றல்ல பல தலைமுறையின் உழைப்பால் உருவான பசுமை இது. நெல், கரும்பு, வாழை என குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்களை மட்டும் சாகுபடி செய்யாமல் பலா, தென்னை, தேக்கு, மா, பப்பாளி என பல்வேறு வகையான மரங்களையும், அதிகளவில் நட்டு வளர்ப்பதே, இந்த பசுமைக்கு முக்கிய காரணம்.

வயல்களில் மட்டுமின்றி வீட்டுக்கு வீடு மரங்களை அதிகளவில் நட்டு பராமரிக்கின்றனர். இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நீர் வளம் அழிந்து நிலங்கள் வறண்டு, பசுமைப்பகுதிகள் பாலைவனமாகி விடும்.
வறட்சியான இந்த மாவட்டத்தில் ஆலங்குடியில் இருந்து ரகுநாதபுரம் வரையிலான பகுதிகள் செழிப்புடன் காணப்படும். இந்த பசுமைக்கு விவசாயிகளின் கடும் உழைப்பும், அதற்கு ஒத்துழைக்கும் செம்மண் பூமியும் முக்கிய காரணம்.
இந்த மண்ணில் நெல், கடலை, உளுந்து மட்டுமல்ல வெள்ளரி, மிளகு, சோளம், தர்பூசணி என அனைத்து வகையான பயிர்களும் அமோகமாக விளைகின்றன. அப்படிப்பட்ட இந்த மண்ணை அழிக்கும் வகையில் கொண்டு வரப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த புதுக்கோட்டையைச்சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் கூறும் போது, புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த எனக்கு இத்தனை ஆண்டுகளாக அருகிலேயே இப்படியொரு செழிப்பான பகுதி இருக்கும் விவரம் தெரியவில்லை. முதன் முறையாக இங்கு வந்துள்ளேன். பார்த்தவுடன் வியந்து விட்டேன். கேரளா, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் இருப்பது போன்ற பசுமையை இங்கு காண முடிகிறது என்றார்.

அறவழியில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் என்ன? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
நெடுவாசலில் மட்டும் தொடங்கிய இந்த போராட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் பரவியது. அத்துடன் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படும் வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மாணவர்கள், இளைஞர்கள், அதிக அளவிலான பெண்கள், திரைத்துறையினர் ஆதரவுடன் போராட் டம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது. தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோரும் நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு அளிப்பதால் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமானது.
நேற்று நடந்த போராட்டத்தில் வடகாட்டில் பெண்கள் கும்மியடித்தும், நெடுவாசலில் ஒப்பாரி வைத்தும், புரட்சியாளர் இளைஞர் எழுச்சி மாணவர் இயக்கம் சார்பில் பாடை கட்டி போராட்டமும் நடத்தினர். அத்துடன் நெடுவாசல் கிராமத்தில் இரவில் அனைத்து வீடுகளின் முன்பும் பெண்கள் அகல் விளக்கேற்றி ஹைட்ரோ கார்பன் திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்த போதிலும் இதனை கைவிட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மத்திய மந்திரி, கலெக்டர், ஓ.என். ஜி.சி. அதிகாரிகள் தலைமையிலான பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
பிரச்சினைக்கு தீர்வு என்பது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று நெடுவாசல் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியதால் மத்திய, மாநில அரசுகள் இறங்கி வந்தன. ஆனால் நெடுவாசல் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது.

எந்த வித அசம்பாவிதத்திற்கும் இடமளிக்காமல், அறவழியில் நடத்தி வரும் நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் என்ன? விவசாயத்தையும், தொழிலையும் விட்டு, விட்டு நடத்தி வரும் போராட்டத்திற்கு செவி சாய்க்காமல் அரசு மவுனம் காப்பது ஏன் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து போராட்டக்குழுவை கொண்டு ஆலோசனை நடத்தி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், இதுபோன்ற செயல்களால் மத்திய, மாநில அரசுகள் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமும் நெடுவாசலுக்கு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிராம மக்கள் சார்பிலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் நிதியுதவியுடனும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் அங்கு ஏராளமான போலீசார் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்து விடாதீர்கள் என்று பெண்கள் கண்ணீர் விட்டு தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் நெடுவாசல் கிராமத்தில் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது.
வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், வீட்டின் முன்பு அகல் விளக்கு ஏற்றுதல், ஆர்ப்பாட்டம் என போராட்டத்தில் புதிய யுக்திகளை நெடுவாசல் கிராம மக்கள் கையாண்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கும்மியடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள் இன்று ஒப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தலைவிரி கோலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்து விடாதீர்கள் என்று கண்ணீர் விட்டு கதறி ஒப்பாரி வைத்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டதுபோல் தென்பட்டது. இன்றைய போராட்டத்தில் காலையில் குறைந்த அளவிலான நபர்களே இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது.
மதியம் சுமார் 1 மணியளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான மதிய உணவு தயாரானது.

நெடுவாசலில் தீவிரம் அடையும் போராட்டத்தை கைவிடவேண்டுமானால் பேச்சுவார்த்தை தேவையில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதால் தான் முடியும் என்று போராட்டக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த மாதம் 15-ந்தேதி அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து நெடுவாசல் மற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் அருகிலுள்ள வாணக்கன்காடு, கோட்டைக்காடு, கருக்காக்குறிச்சி, வடகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 16-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்ததோடு, நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் எந்தவித பாதிப்பும் வராது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்த நெடுவாசல் கிராமத்தினர் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே அரசியல் கட்சியினரும் ஆதரவளித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி.ராஜா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் திருமாவளன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்தனர்.
போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக கலெக்டர் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. கோட்டைக்காடு கிராம மக்கள் மட்டும் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் மதுரையில் நடந்த பேச்சுவார்த்தையில் நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த 30 பேர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து செய்து மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நெடுவாசலில் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள வடகாடு கிராமத்திலும் பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதில் கலந்துகொள்பவர்களுக்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் மூட்டை, மூட்டையாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் வந்து குவிக்கப்பட்டுள்ளன.
விடுமுறை தினமான நேற்று திரைத்துறையை சேர்ந்த நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், சண்முகம், குட்டிப்புலி சினிமா நடிகர் ராஜசிம்மன் உள்ளிட்டோர் நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.
அதேபோல் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவும் நெடுவாசல் வந்து வருகிற 11-ந்தேதி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை சந்திக்கும் வரை போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை ஏற்க கிராமத்தினர் மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே போராட்டக் குழுவை சேர்ந்த சிங்காரம் கூறுகையில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தவாறு வருகிற 9-ந்தேதி பாராளுமன்றம் தொடங்குகிறது. 10 அல்லது 12-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கூறியுள்ளார். நாங்கள் பிரதமரை சந்தித்தாலும் எங்களுக்கு திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.
இருந்தாலும் எங்கள் குறைகளை முறையிட கிடைத்த வாய்ப்பாக கருதி பிரதமர் மோடியை சந்திக்க போராட்டக்குழுவை சேர்ந்த யாரெல்லாம் செல்வது என்பது குறித்து 100 கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துபேசி அறிவிப்போம். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றார்.
நாளுக்கு நாள் தீவிரம் அடையும் போராட்டத்தை கைவிடவேண்டுமானால் பேச்சுவார்த்தை தேவையில்லை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்வதால் தான் முடியும் என்று போராட்டக்குழுவினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

நெடுவாசல் போராட்ட களத்திற்கு வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு அவர் நெடுவாசல் போராட்டக்களத்திற்கு திடீரென வந்தார். அப்போது பொது மக்கள் எழுந்து நின்று எச். ராஜாவை முற்றுகையிட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி எச்.ராஜாவை போராட்டக்களத்தில் அமர வைத்தனர்.
இருப்பினும் பொதுமக்கள் எச்.ராஜா வெளியேறுமாறு கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் எச். ராஜா பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு முன்பாகவே தடை அமலில் இருக்கும் போது நான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட்டேன். இதனால் தமிழக அரசு என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

எனது சொந்த ஊரான கண்டனூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உங்களுடைய உணர்வை புரிந்தவன். 18 நாள் போராட்டத்துக்கு இடையில் மக்கள் விரும்பாவிட்டால் இந்த திட்டம் வராது என்று அறிக்கை விட்டேன். முதல்வர் அனுமதி கொடுக்காததால் இத்திட்டத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது, திணிக்காது.
தமிழகத்தில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுகிறது. எங்கேயும் எதிர்ப்பு வரவில்லை. மக்கள் வெறுத்தால் இத்திட்டம் வராது என்றார். அப்போது பொதுமக்கள் வேண்டாம், வேண்டாம் என்றனர். மேலும் அங்கிருந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு அமர்ந்து கருப்புக்கொடி காட்டி எச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து எச். ராஜா போராட்ட மையத்தில் இருந்து நுழைவு வாயிலை தவிர்த்து வேறு வழியாக வெளியேறினார்.

போராட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜாவுக்கு எதிராக பொதுமக்கள் கோஷமிட்ட காட்சி.
எனது சொந்த ஊரான கண்டனூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உங்களுடைய உணர்வை புரிந்தவன். 18 நாள் போராட்டத்துக்கு இடையில் மக்கள் விரும்பாவிட்டால் இந்த திட்டம் வராது என்று அறிக்கை விட்டேன். முதல்வர் அனுமதி கொடுக்காததால் இத்திட்டத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது, திணிக்காது.
தமிழகத்தில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுகிறது. எங்கேயும் எதிர்ப்பு வரவில்லை. மக்கள் வெறுத்தால் இத்திட்டம் வராது என்றார். அப்போது பொதுமக்கள் வேண்டாம், வேண்டாம் என்றனர். மேலும் அங்கிருந்த மாணவர்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு அமர்ந்து கருப்புக்கொடி காட்டி எச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து எச். ராஜா போராட்ட மையத்தில் இருந்து நுழைவு வாயிலை தவிர்த்து வேறு வழியாக வெளியேறினார்.
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கடந்த சில நாட்களாக வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 517 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மாடுகளை பிடிக்க 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக காளைகளை லாரிகள், டிராக்டர், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய்க்கு கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 9 காளைகளுக்கு தகுதி இல்லை எனக்கூறி, அவை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை கொம்பால் முட்டி பந்தாடின. ஒரு காளை வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கட்டையை முட்டி தூக்கியபடி வெளியே ஓடியது.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளைகள் வெளியேறும் வழியில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில காளைகள் வெளியேறாமல் மீண்டும் வாடிவாசலுக்கு திரும்பி வந்தன. இதைத்தொடர்ந்து விழா கமிட்டியினர் மற்றும் போலீசார் ஒரு சரக்கு ஆட்டோவில் வந்து மாடுகளை வெளியேற்றினார்கள். இதேபோன்று பலமுறை நடைபெற்றதால், அவ்வப்போது சிறிது நேரம் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு, மீண்டும் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உள்பட 71 பேர் காயமடைந்தனர். இதில் மாட்டை அவிழ்த்து விட்டு வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு மாட்டின் உரிமையாளரான அன்னவாசல் எல்லப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமியை (வயது 50) காளை முட்டி தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த புதுக்கோட்டை காமராஜபுரம் 20-ம் வீதியை சேர்ந்த சையது இப்ராகிம் மகன் வாசீம்அக்ரம்(20) மாடு முட்டியதில் இறந்தார்.
மேலும் ஜல்லிக்கட்டில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முத்து மகன் வீரராகவன் (20), நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை மகன் அலெக்ஸ் (17), மேலக்காயம்பட்டி பகுதியை சேர்ந்த ராமையா மகன் செந்தில்குமார் (34) ஆகிய 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், குத்துவிளக்கு, சில்வர் குடம், மின்விசிறி, ரொக்கப்பணம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை காண்பதற்காக புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் ஒரு தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மதியம் 1.30 மணியவில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 800 பேர், 168 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில் பிரதீப் (வயது22), அருண் (18), ராமகிருஷ்ணன் (55), சேகர் (48) ஆகிய 4பேர் ஒரு விசைப்படகிலும், சத்தியராஜ்(27), செல்வராஜ்(55), கண்ணன் (40) செல்வம் (35), ரத்தினம் (38) ஆகிய 5பேர் மற்றொரு விசைப்படகிலும் நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 9 மீனவர்களையும் 2 விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்தனர். பின்னர் அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துசென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து 9 பேரும் ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர் சத்தியராஜின் குடும்பத்தினர் சோகத்துடன் நிற்கும் காட்சி
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் 18-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
புதுக்கோட்டை:
ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் அளித்த உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்க மறுத்து நெடுவாசலில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு போராட்டம் நடந்து வருகிறது. இதே போல நல்லாண்டார் கொல்லையிலும் வயல்வெளியில் தகரக்கொட்டகை அமைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்பினர், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.
நெடுவாசல் நாடியம்மன் கோவில் முன்பு நடைபெறும் போராட்ட களத்திற்கு வருகை தரும் அரசியல் கட்சியினர் அனைவரும் நல்லாண்டார் கொல்லைக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நல்லாண்டார் கொல்லை அருகே கோட்டைக்காட்டிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தில் கடந்த 26-ந்தேதி அறப்போராட்டத்தை தொடங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் கோட்டைக்காடு கிராமத்தில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினரின் ஆழ் துளை கிணறுகளை மூட வேண்டும், இயற்கை எரிவாயு எடுக்க கூடாது, விவசாயிகளிடம் வாங்கிய நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கோட்டைக்காட்டில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை பகுதி பொதுமக்கள் கலெக்டருடனான பேச்சு வார்த்தையில் பங்கேற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் கணேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் நல்லாண்டார் கொல்லை, நெடுவாசல் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் கலெக்டருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்து புறக்கணித்தனர்.
இந்நிலையில் மத்திய மந்திரியுடன் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அறவழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இது பற்றி அவர்கள் கூறும் போது, திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரி மத்திய மந்திரியை சந்தித்தோம். இத்திட்டத்தால் எங்களுக்கான பாதிப்புகளை அரசுக்கும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கும் தெளிவாக விளக்கியுள்ளோம் . மக்கள் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் போதிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே அறவழிப்போராட்டம் தொடரும் என்றனர். அதன்படி நெடுவாசலில் இன்று 18-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்படும் என கலெக்டர் கணேஷ் உறுதியளித்தும், அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மீண்டும் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

போராட்டத்தில் குழந்தைகளுடன் பங்கேற்ற பெண்கள்.

நெடுவாசல் போராட்டக்களத்தில் நேற்று பெய்த மழையினால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனிடையே போராட்டத்தை தொடர்வதற்கான வசதிகளை இளைஞர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
நெடுவாசல் போராட்டக்களத்தில் பந்தல் எதுவும் அமைக்காமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டக்கள் பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அகற்றினர். மேலும் பொதுமக்கள் அமர்வதற்கு வசதியாக தரையில் மணலை குவித்தனர். மேலும் பொதுமக்கள் அமரக்கூடிய இடத்தில் பந்தல் மற்றும் தகர கொட்டகை அமைத்தனர். சமையல் செய்யும் பகுதியிலும் தகர கொட்டகை அமைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தாலும் போராட்டத்தை தொடர்வதற்கான வசதிகளை இளைஞர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க நெடுவாசல் போராட்டக்குழுவினர் மதுரை புறப்பட்டு சென்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேற்று போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசும் போது, நான் தனிமனிதனாக முடிவெடுத்து இங்கு வரவில்லை. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க.வின் நிர்வாகியாக தான் வந்துள்ளேன். இந்த திட்டம், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. இதைத்தான் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த அரசியல்வாதிகளுக்குமே தெரியாது. அது தெரிந்திருந்தால் முன்பே இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். ஆகையால், மீண்டும் ஆய்வு செய்து, மக்களிடம் கருத்து கேட்கப்படும். அப்போது, மக்கள் ஏற்கவில்லை என்றால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்.

ஏதோ அரசியல் கட்சிகள் கூறுவதால் போராட வேண்டாம் என்றும், அறிவியல்பூர்வமாக பாதிப்பு இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவுபடுத்தி உறுதியாக இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்னால் கைவிட்டு விடுகிறோம் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேச போராட்டக்குழுவினர் இன்று (சனிக்கிழமை) மதுரையில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனையும், பா.ஜ.க. தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி நல்லாண்டார் கொல்லை, வாணக்கன்காடு, வடகாடு, கருக்காகுறிச்சி, புள்ளான் விடுதி, நெடுவாசல், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் 30 பேர் இன்று மதுரை வந்துள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்திப்பதற்காக 7 கார்களில் புறப்பட்டு சென்றனர்.
அப்போது போராட்டக் குழுவினர் நிருபர்களிடம் கூறும் போது, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், இந்த போராட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம், இயற்கை எரிவாயு எடுக்கும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எரிவாயு எடுக்க எண்ணெய் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அபாயகரமாக உள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூட வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு பொது மக்களுக்கு நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஆலங்குடியில் இன்று கலெக்டருடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. மத்திய மந்திரியுடனான சந்திப்பில் எடுக்கும் முடிவின் படி கலெக்டரை சந்திப்பதா, வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்வோம். போராட்டத்தை வாபஸ் பெற்ற கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த பொது மக்களும் மத்திய மந்திரியை சந்திக்க வந்துள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம் என்றனர்.
நேற்று நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால் போராட்டக்குழுவினர் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் இன்றும் கலெக்டருடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டைக்காடு மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.

தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மீத்தேன் வாயு, ஷேல் கியாஸ் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.