search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வாபஸ்
    X

    புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வாபஸ்

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காட்டில் நடந்த போராட்டம் தற்காலிகமாக  வாபஸ் பெறப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக திரும்பப்  பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டைக்காடு மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பலரும்  போராட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.



    தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மீத்தேன் வாயு, ஷேல் கியாஸ் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு  காரணமாக கைவிடப்பட்ட நிலையில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டம் நடந்து வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இயற்கை எரிவாயு  எடுக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும்,  நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.
    Next Story
    ×