search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரைவு ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
    X

    மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ெரயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விரைவு ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

    • புதிய ரெயிலுக்கு ரெயில் பயணிகள் சங்கத்தினர், வணிகர் சங்கத்தினர் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
    • ரெயிலின் கார்டு சேகருக்கு மாலை, சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    பாபநாசம்:

    கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் தஞ்சை திருச்சி மதுரை வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை அடுத்து தனது முதல் பயணத்தை தொடங்கிய வண்டிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டா டப்பட்டது.

    டெல்டா பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மயிலாடுதுறை கும்பகோ ணம் பாபநாசம் வழியாக செங்கோட்டைக்கு நேரடி ரயில் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

    தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் ராஜபாளையம், தென்காசி சங்கரன்கோவில் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து மயிலாடுதுறை – செங்கோட்டை இடையே புதிய ரயில் வண்டி இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

    இதை அடுத்து செங்கோட்டை விரைவு ரயில் முதல் சேவை மயிலாடுதுறையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு பகல் 13.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

    புதிய ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.

    முன்னதாக வண்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ராஜராஜன் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி குழுத்தின் நெறியாளர் எஸ்.கே.ஸ்ரீதர் ரயில் வண்டியின் ஓட்டுனர்கள் மது, விஸ்வநாதன் மற்றும் ரயில் வண்டியின் கார்டு சேகர் ஆகியோருக்கு மாலைகள், சால்வைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளருமான சரவணன், சங்க தலைவர் சோமநாதராவ், செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், சாமிநாதன், சங்கர், பாபநாசம் வணிகர் சங்க செயலாளர் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், அசோகன் ஆகியோரும் ஓட்டுனர்களுக்கு சால்வை கள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

    நிகழ்ச்சியில் பாபநாசம் நகர தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பூம்புகார் கைவினை கழகத்தின் முன்னாள் தலைவர் சுவாமிமலை ஸ்ரீகண்டன் ஸ்தபதி, பாபநாசம் அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் ஆறுமுகம், சம்மந்தம், பாபநாசம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்நாதன், பிரான்சிஸ்சேவியர், வெங்கடேசன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பிரகாஷ், முத்துமேரிமைக்கேல்ராஜ், தேன்மொழிஉதயக்குமார், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஓய்வு பெற்ற செய்திதுறை இணை இயக்குனர் கண்ணதாசன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

    இந்த செங்கோட்டை விரைவு ரயில் வண்டி பாபநாசம் ரயில் நிலைத்திற்கு பகல் 12.20 மணிக்கு வந்து தஞ்சை, திருவெறும்பூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், தென்காசி வழியாக இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் செங்கோட்டை வழியாகவும், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் தென்காசி வழியாகவும், வியாபார நிமித்தமாக அடிக்கடி செல்லும் வணிகர்களுக்கு உதவியாக மதுரை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லமுடியும்.

    குறைவான கட்டணத்தில் பாதுகாப்போடு பயணம் செய்யும் விதத்தில் பயணிகள் அனைவரும் இந்த ரயில் வண்டியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×