search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே பொதுமக்கள் போராட்டம் காணாமல் போன கிணறு கண்டுபிடிப்பு
    X

    பொக்லைன் எந்திரம் கொண்டு மூடப்பட்ட கிணறை தோண்டிய காட்சி.

    தாரமங்கலம் அருகே பொதுமக்கள் போராட்டம் காணாமல் போன கிணறு கண்டுபிடிப்பு

    • தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமம் மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு ஆழ்துளை கிணறு அமைதது.
    • அப்போது காணாமல் போன பொது கிணற்றை மீட்டு தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமிரெட்டிபட்டி கிராமம் மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு ஆழ்துளை கிணறு அமைதது. அதனை பொதுமக்கள் நீரை இறைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் கிணற்று நீரை பயன்படுத்தாமல் போனதால் கிணறு பயன்பாடு இன்றி இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையை பயன்படுத்திக்கொண்ட அருகில் உள்ள மூர்த்தி என்பவரின் குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றை மூடி மறைத்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் பல வருடங்களாக கிணற்றை மீட்க அரசு அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்தனர். இந்நிலையில் கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றிய போது நிதியில் இருந்து 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மூர்த்தி என்பவரின் மகன்கள் சின்னத்தம்பி, குருநாதசாமி, ராஜி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

    இதனால் நேற்று காலை ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் மெயின்ரோட்டில் மந்தை தோப்பூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காணாமல் போன பொது கிணற்றை மீட்டு தரவேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.இதை தொடர்ந்து பொதுக்கிணறு ஆக்கிரமிப்பு செய்து மூடப்பட்ட இடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு தோண்டிய போது 30 அடி ஆழம் கொண்ட வட்ட கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் பேச ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதனிடையே மறியலில் ஈடுபட்டவர்கள் பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அனுராதா கொடுத்த புகாரின் பேரில் ராமிரெட்டிபட்டி ஊராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் சரவணன் .மணி உட்பட 40 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×