search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுனில் செல்போன் டவர் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு
    X

    டவுன் சாலியர் தெருவில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்.

    நெல்லை டவுனில் செல்போன் டவர் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு

    • நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது.
    • சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கை யை கைவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொது மக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமா னோர்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.

    அடிப்படை வசதிகள்

    ராமையன்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்டுக்குட்பட்ட சிவாஜி நகர், அரசு புதுகாலனி, சைமன் நகர், ஷகி நகர் உள்ளிட்ட பகுதியில் 165 தெருக்கள் உள்ளது. இதில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே உடனடியாக அதனை நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    செல்போன் டவர்

    டவுன் சாலியர் தெருவை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறோம். திருவள்ளுவர் தெருவில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கை யை கைவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இந்திய தேசிய லீக் கட்சி அமைப்பு செயலாளர் சிக்கந்தர் துல்கர்னி கொடுத்த மனுவில், மேலப்பா ளையம் குறிச்சி முதல் ரெட்டியார்பட்டி செல்லும் புறவழிச்சாலைகளை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். மேலப்பாளையம் விரிவாக்க பகுதிகளான பீடி காலனி, ரஹ்மான் தாஜ் நகர், அமுதா பேட், பிறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×