என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேஜைகள்- இருக்கைகள் வழங்கல்
- மாணவர்கள் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது
- தனுஷ் குமார் எம்.பி. , வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கினர்.
சிவகிரி:
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறை யில் தரையில் அமர்ந்து படிப்பதை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களுக்கு 60 மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டது. தனுஷ் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் மாணவர்களுக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகளை வழங்கி சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கட்டபொம்மன், தகவல் தொழில்நுட்ப அணி சுந்தர், தென்மலை கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், உள்ளார் விக்கி, தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






