என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்த காட்சி. அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் ஆகாஷ் உள்ளனர்.
தென்காசியில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் - முதல்-அமைச்சர் பங்கேற்கும் இடத்தை அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி வருகிறார்.
- 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
தென்காசி:
முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிறார்.
முதல்-அமைச்சர்
இதற்காக தென்காசி அருகே உள்ள கணக்குப்பிள்ளை வலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.
விழாவில் தென்காசி மாவட்டத்தில் முடிவுபெற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தினை தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார்.
அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தென்காசி வருவதையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சியின் சார்பில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.






