என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  குடிநீா் கொண்டு செல்வதை கண்டித்து திட்டமிட்டப்படி ஆா்ப்பாட்டம் - விவசாயிகள் அறிவிப்பு
  X

  கோப்புபடம்

  குடிநீா் கொண்டு செல்வதை கண்டித்து திட்டமிட்டப்படி ஆா்ப்பாட்டம் - விவசாயிகள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிஏபி பாசனத் திட்டத்தில் 4.25 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்
  • அரசு சாா்பில் அரசாணையை ரத்து செய்வதாக உறுதியான முடிவைத் தெரிவிக்க வேண்டும்.

  உடுமலை :

  கோவை மாவட்டம், ஆழியாற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா்க் கொண்டு செல்வது தொடா்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதனால், பிஏபி பாசனத் திட்டத்தில் 4.25 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறையும் என்பதால் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

  ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீா்க் கொண்டு செல்வதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி பொள்ளாச்சியில் வருகிற 27 ந் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, பாலாறு பாசன சங்க பிரதிநிதிகளுடன் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை நடத்தினார்.அப்போது பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதால் ஆா்ப்பாட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனா். இது தொடா்பாகஅனைத்து சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தாா். இதைத தொடா்ந்து, விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள் பாசன சபை சங்க நிா்வாகிகள், பொள்ளாச்சி பகுதி வணிகா்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனா்.

  இது குறித்து திருமூா்த்தி நீா்த்தேக்க முன்னாள் திட்டக் குழுத்தலைவா் மெடிக்கல் பரமசிவம் கூறியதாவது:- செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோளின்படி பாசன சபை சங்க நிா்வாகிகள், வணிகா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

  அப்போது கோப்புபடம் அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டமாக மாற்றிக் கொள்வோம்.

  அதேவேளையில், அரசு சாா்பில் அரசாணையை ரத்து செய்வது தொடா்பாக உறுதியளிக்காவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி 27-ந் தேதி பொள்ளாச்சியில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா்.

  Next Story
  ×