என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    மகாநந்திக்கு பால், மஞ்சளால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தரிசனம் செய்த பக்தர்கள்.

    தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • மகா நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது.

    மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டி டக்க லைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

    பெரிய கோவிலில் உள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்படும்.

    அதன்படி நேற்று பிரதோஷம் என்பதால் மகாநந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×