search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகா அரசை கண்டித்து சென்னை கடற்கரையில் போராட்டம் நடத்திய பி.ஆர்.பாண்டியன் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கர்நாடகா அரசை கண்டித்து சென்னை கடற்கரையில் போராட்டம் நடத்திய பி.ஆர்.பாண்டியன் கைது

    • சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு கர்நா டகாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. போராட்டங்களும் நடக்கிறது.

    இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து பெங்களூரில் நாளை (26-ந் தேதி) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    மேலும் கர்நாடகாவில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் கர்நாடகாவில் நாளை அரசு பஸ்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் நடைபெறும் முழு அடைப்பை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×