search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பி.ஆர். பாண்டியன் ஆய்வு
    X

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பி.ஆர்.பாண்டியன் ஆய்வு.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பி.ஆர். பாண்டியன் ஆய்வு

    • சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.
    • ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக மாநில அரசு நிதி வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் நல்லோர் வேட்டங்குடி மாதானம் இடமணல் பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறுகையில்,

    மயிலாடுதுறை மாவ ட்டத்தில் வரலாறு காணாத அளவில் 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி, தரங்கம்பாடி வட்டப் பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. மழை பெய்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் கிராமப் பகுதிகளில் மழை நீர் வடியவில்லை.

    விளை நிலங்களில் தேங்கிய நீர் சிறிதும் வடியாத காரணத்தால் கதிர் வரக்கூடிய நிலையிலிருந்த சம்பா நெற் பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.

    இனி இந்த பயிர்கள் பிழைப்பதற்கோ, மறு உற்பத்திக்கோ வாய்ப்பில்லை.

    தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்டத்தில், கடந்த 2020-21-ம் ஆண்டில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கியுள்ளது.

    தற்போ தைய உர விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக பேரிடர் மேலாண்மை திட்ட நிதியிலிருந்து மா நில அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    இப்பகுதியில் புதிய வடிகால் அமைப்பதற்கான திட்டம் நிலுவையில் உள்ள தாகக் கூறப்படுகிறது.

    அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து பேரிடர் பாதிக்கக் கூடிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×