என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னாக்குடியன் கால்வாய் தூர்வாரும் பணி - ரூபி  மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    கால்வாய் தூர்வாரும் பணியினை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    பொன்னாக்குடியன் கால்வாய் தூர்வாரும் பணி - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு

    • சிங்கிகுளம் பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • பச்சையாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற மேல்மட்ட பாலப்பணிகளையும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., பாளை வட்டார விவசாயிகளின் கோரிக்கைகளான பச்சையாற்றின் பொன்னாக்குடியன் கால்வாயினை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்று கால்வாயினை தூர்வாரும் பணியினை உடனடியாக செய்திட பரிந்துரை செய்தார்.

    அதன் அடிப்படையில் நாங்குநேரி தொகுதி களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அங்கு நடைபெறும் களக்காடு பச்சையாற்றின் பொன்னாக்குடியன் கால்வாயை தூர்வாரும் பணிகளையும் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்படுகின்ற மேல்மட்ட பாலப்பணிகளையும் ஆய்வு செய்தார். இதில் பாளை யங்கோட்டை மேற்கு மற்றும் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கணேசன், நளன், சிங்கிக்குளம் கிராம காங்கிரஸ் தலைவர் பால்பாண்டி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு,மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை மாவட்ட செயலாளர் வேலையா, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், வட்டார காங்கிரஸ் நிர்வாகி சேசையா, விவசாய சங்க நிர்வாகிகள், ரெட்டியார்பட்டி கவுன்சிலர் சுடலைகுமார், தோட்டாக்குடி செல்வ முருகன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×