என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
    X

    சாலை விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
    • பேரிகார்டு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு மறியல் பகுதியை சேர்ந்தவர் மெ. சரவணன் (வயது 54 ).

    இவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ஸ்ரீரங்கத்தி தஞ்சை நோக்கி புறப்பட்டார் .

    நள்ளிரவில் நாஞ்சிக் கோட்டை ரோடு கருணாவதி ஆர்ச் அருகே வந்தபோது சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×