என் மலர்
உள்ளூர் செய்திகள்

குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
- ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் குற்றச்ெசயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ரவுடிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, திருந்தி வாழுங்கள் என அறிவுரை கூறியும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதுபோல், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து, உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
Next Story






