என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்ணார்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
நெல்லை மாநகர பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனை
- நெல்லை மாநகர பகுதியில் பைக் சாகசங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.
- வண்ணார்பேட்டையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி யில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
20 இடங்களில் வாகன சோதனை
வாகனங்களில் விதிகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டுதல், பைக் சாகசங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாநகர பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து துறை மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளுக்கு புறம்பாக நம்பர் பிளேட் மாட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
துணை கமிஷனர் ஆய்வு
முதல் முறையாக பிடிபடுபவர்களுக்கு ரூ.500-ம், 2-வது முறையாக அதே குற்றத்தை செய்தவர்களுக்கு ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.
வண்ணார்பேட்டையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சி முத்து தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பிற்பகல் வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனை துணை கமிஷனர் சீனிவாசன் ஆய்வு செய்தார்.
அப்போது விதிமுறை களை மீறி நம்பர் பிளேட் மாட்டி வந்தவர்களிடம் உடனடியாக அதனை மாற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கடைகளுக்கு சென்று அவர்கள் நம்பர் பிளேட்டை மாற்றி துணை கமிஷனரிடம் அதனை காட்டி விட்டு சென்றனர். தொடர்ந்து நெல்லையில் உள்ள வாகன ஷோரூம்களுக்கு சென்ற போலீசார் விதிமுறைகளை பின்பற்றி நம்பர் பிளேட் வழங்குமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.






