என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள்.
மேலசெவலில் வாரச்சந்தைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்- கலெக்டரிடம் மனு
- மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- போலீசார் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேலசெவல் சனிக்கிழமை வாரச்சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வாரச்சந்தை
மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க நெல்லை டவுன், பாளை பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே மேலசெவலில் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சந்தை அமைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் வாய்மொழி யாக உத்தரவை பெற்று சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தோம்.
இதற்காக கடைகளுக்கு முன் தொகை, மாத வாடகை பேசி சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின் அவசர தேவைகளுக்காக கழிவறை, குடிநீர் வசதிகள், மின் விளக்குகள் பொருத்தி உள்ளோம். 50 கடைகள் அமைப்பதற்காக அனைத்து பணிகளும் நடை பெற்று உள்ளது.
மேலும் அந்த கடைகளில் விற்பனை செய்வதற்காக பழங்கள், மீன், கருவாடு, மளிகை சாமான்கள் உள் ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.
இந்நிலையில் முன்னீர் பள்ளம் போலீசார் மேல செவலில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சந்தை அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதால் மேலசெவலில் சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை கள் செயல்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






