என் மலர்
பெரம்பலூர்
குன்னம் அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 21). இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் திட்டக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே வந்த பால் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சாந்தப்பன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டார்மங்கலம் கிராமத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்:
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகை நகரங்களைவிட கிராமங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தண்ணீர் நிரப்புதல், சைக்கிள் ரேஸ், கபடி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
பெரம்பலூரில் மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 42 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 86 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 47 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 18 பேரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 546 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 381 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 346 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,230 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் அருகே குளிக்க சென்ற 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா இனாம் அகரம் கிராமத்தின் வழியாக கல்லாறு தடுப்பணை செல்கிறது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பத்மா (40), ரேணுகா (20), சௌந்தர்யா (18) மற்றும் ராதிகா (25) ஆகிய நான்கு பெண்களும் குளிக்க சென்றனர்.
முதலில் குளிக்க உள்ளே இறங்கிய பத்மா ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாமல் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்ற ரேணுகா, சௌந்தர்யா, ராதிகா ஆகியோரும் அடுத்தடுத்து தடுப்பணையில் மூழ்கி கொண்டிருந்த நிலையில் இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.
இதில் ராதிகாவை மட்டுமே மீட்கமுடிந்தது. மற்ற 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற வி.களத்தூர் போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் காப்பற்றப்பட்ட ராதிகா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வி.களத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பொலார்ட் என்கிற நவீன்குமார் (வயது 23), நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அருகே மதுரைவீரன் கோவில் புதூரை சேர்ந்த சேகர் மகன் கோகுல் என்ற கோகுல் ஸ்ரீ (20), பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த யயாதி (39) ஆகிய 3 பேர் பெரும்பலூரில் 7 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகி இருந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 13லு பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், மடிக்கணினி , செல்போன் ஆகியவை மீட்கப்பட்டது.
சிமெண்டு ஆலையின் முன்னாள் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம் பெரிய அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 40). இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 8 வயதில் அஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். கொளஞ்சி அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் போக்குவரத்து மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
வேலைக்கு சென்று வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாகவே குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ரம்யா துபாய் அபுதாபியில் கடந்த ஒரு ஆண்டாக நர்சாக பணிபுரிந்து வருவதால் கொளஞ்சி வேலைக்கு செல்லாமல் மகன் அஸ்வந்த்தை கவனித்து கொண்டு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரம்யாவின் தாய் துறைமங்கலத்திற்கு வந்து தனது பேரன் அஸ்வந்த்தை பொங்கல் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பச்சலநாயக்கன் பட்டிக்கு அழைத்து சென்று விட்டார். இதனால் கொளஞ்சி மட்டும் வீட்டில் தனியார் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் கொளஞ்சியை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே மின்விசிறி கொக்கியில் சேலையால் கொளஞ்சி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் சில்லக்குடியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டியும், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கிராம மக்களும், ஜல்லிக்கட்டு பேரவையும் மும்முரமாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தினால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், சில்லக்குடியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது.
இதையடுத்து, அனுமதி ரத்து செய்யப்பட்ட தகவலை தாசில்தார் மூலம் சில்லக்குடி கிராம மக்களுக்கும், ஜல்லிக்கட்டு பேரவைக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடு பணிகளை செய்து வந்த சில்லக்குடி கிராம மக்கள் கவலை அடைந்தனர்.
மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்தவுடன் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி, பின்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் அனுமதியை ரத்து செய்ததை கண்டித்து கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறாதவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொ.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டிற்கான தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உட்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரால் கடந்த 04.01.22 ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 04.01.22 தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் நாளது தேதி வரை 181766 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களூக்கு 96.60 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 6330 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு நாளை (17.01.22 ஆம் தேதி, திங்கட்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு பெறப்படாமல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நியாய விலைக்கடைகளுக்கு வந்து 17.01.22 அன்று, திங்கட்கிழமை காலை 7 மணி முதல் பெற்று கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

மாவட்டங்களை இணைக்கும் சின்னாறு பாலம் உடைந்ததால் பொதுமக்கள் அவதி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் சின்னாற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த 2006&ம் ஆண்டு கட்டப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்து வேள்விமங்கலம், வீரமநல்லூர் மற்றும் செந்தூறை வழியாக அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.
கடந்த வட கிழக்கு பருவமழையின்போது சின்னாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் பாலம் பழுதடைந்தது. இந்த பாலம் வழியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு ஏற்றிவரும் அதிகனரக வாகனங்களும் பயணித்தன. மேலும் அரசு தனியார் பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ்களும் இந்த பாலத்தை கடந்து சென்று வந்தன.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திடீரென பாலத்தின் ஒரு பகுதி உள்வாங்கியது. தற்போது அந்த பகுதி உடைந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படவில்லை. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை கடந்து யாரும் செல்லக்கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டு, சாலையை மூடியுள்ளனர். இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இந்த பாலம் மூடப்பட்டு விட்டதால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகவும் சிரமமடைவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இந்த ஆற்றுப்பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டிட உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு அம்மன் நகரை சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு, சாந்தினி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், சாந்தினி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, குழந்தையுடன் சாந்தினி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
இதற்கிடையே இன்று வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சாந்தினிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
பின்னர் அவர் வந்து பார்த்த போது, வீட்டின்பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளின் நிர்வாகங்கள், தங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களை அமைத்து, கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் கல்வி நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்ழீநிலையில், பொதுமக்களுக்கு அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட விரும்பிய நகராட்சி நிர்வாகம் முதல்கட்டமாக அறிவுசார் மையம், நூலகம் ஆகியவற்றை தொடங்க விரும்பியது.
இதற்காக விரிவான திட்டங்களுடன் தமிழக அரசிடம் முறைப்படி அணுகியதன் விளைவாக, அண்மையில் திட்ட அனுமதி மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய நகராட்சி அலுவலக வளாகத்தில், நிர்வாக அலுவலக கட்டிடத்தின் பின்பகுதியில் 3,067 சதுர அடி பரப்பளவில், ரூ.1.15 கோடி மதிப்பில் அறிவு சார் மையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் வரவேற்பறை, அலுவலக அறை, கட்டுப்பாட்டு அறை, படிப்பகம், நூலகம், பயிற்சி மையம், கணினி அறை, உணவருந்தும் இடம், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை அமைய உள்ளன.
மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தேவையான நூல்கள், கலை, அறிவியல், பொருளாதார, பொறியியல், சட்டம், மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவு நூல்கள், பொது அறிவு நூல்கள், கலைக் களஞ்சியங்கள் ஆகியவை இடம் பெறுவதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.
இதில் சிறந்த ஆளுமைகள் மூலம் இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, இணைய வழி மாதிரி போட்டித் தேர்வுகளும் நடத்தப்படும்.
மேலும் இணைய வழி நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளையும் இங்கிருந்து இளைஞர்கள் எதிர் கொள்ளலாம். இம்மையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கி, 6 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திருச்சிக்கு சென்றபோது சகோதரர்கள் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாடாலூர்:
சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் மாருதி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் வெங்கடவரதன் (45).
இவர்களது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் குளத்தூர் கிராமம் ஆகும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சகோதரர்கள் இருவரும் சென்னையில் இருந்து நேற்று இரவு வாடகை காரில் திருச்சிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குமாரின் மகள் தன்யாஸ்ரீ (14) என்பவரும் உடன் வந்தார்.
காரை கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் பெரிய மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் (27) என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திருச்சி நோக்கி வந்த கார், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த ஆஞ்சநேயர் கோவில் அருகே கடுமையான பனிமூட்டம் காரணமாக முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.
இதில் டேங்கர் லாரி தீப்பிடித்தது. மேலும் லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட காரிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட சகோதரர்கள் குமார், வெங்கடவரதன் ஆகிய இருவரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
மேலும் குமாரின் மகள் தன்யாஸ்ரீ, டிரைவர் விஸ்வநாதன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்தவர்கள் காருக்குள் எரிந்த நிலையில் இருந்தவர்களை மீட்டதோடு, காயம் அடைந்தவர்களை உடனடியாக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் டேங்கர் லாரியின் ஒரு பகுதி மற்றும் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான திருச்சிக்கு சென்றபோது சகோதரர்கள் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.