என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  லாரி- மோதி மொபட்டில் சென்ற வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குன்னம் அருகே லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுகாளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்  சாந்தப்பன் (வயது 21). இவர் சம்பவத்தன்று  இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் திட்டக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

  வசிஷ்டபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே வந்த பால் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

  இந்த விபத்தில் சாந்தப்பன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

  இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×