search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    நாளை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ள அழைப்பு

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறாதவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொ.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&


    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, 2022 ஆம் ஆண்டிற்கான தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உட்பட 21 வகையான  பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரால் கடந்த 04.01.22 ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில்  தொடங்கி வைக்கப்பட்டது.

    இதையடுத்து  பெரம்பலூர் மாவட்டத்தில் 04.01.22 தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 வகை பொருட்கள் அடங்கிய  பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் நாளது தேதி வரை 181766 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களூக்கு 96.60 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 6330 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு நாளை (17.01.22 ஆம் தேதி, திங்கட்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு பெறப்படாமல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய  நியாய விலைக்கடைகளுக்கு வந்து 17.01.22 அன்று, திங்கட்கிழமை காலை 7 மணி முதல்  பெற்று கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்
    Next Story
    ×