என் மலர்
பெரம்பலூர்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் அமைந்துள்ளது தண்டாயுத பாணி திருக்கோவில்.இத் திருக் கோவில் மாவட்டத்தின் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
இக் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் 6-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து இரவு மேளதாளம் முழங்க திருவீதி உலாவும் நடந்து வருகிறது.விழாவின் 7ம் நாள் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து தீபாரதனை நடை பெற்றது.
விழாவினை கூத்தனூர் மூப்பனார் வகையறா நிலக்கிழார்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.திருக்கல் யாண உற்சவத்தில் செயலர் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டாணி தேசிகன், செட்டிகுளம், நாட்டார் மங்கலம், கூத்தனூர், இரூர், பாடாலூர், குரூர், பொம்மனப்பாடி போன்ற கிராமகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மார்ச் 18-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தொடங்கி நடக்கிறது.
கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருட முயன்ற 7 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் அருகே சாலையோரம் வேனில் இருந்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மயில்வாகனம் மனைவி தெய்வகன்னி என்பவர் வரிசையில் நின்று உணவு பொட்டலத்தை வாங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தெய்வ கன்னி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை காணவில்லை. இதனால், கூச்சலிட்டார்.
இதனை பார்த்ததும் நகையை திருடியவர்கள் நைசாக கீழே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். இதுகுறித்து தெய்வக்கன்னி அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார், தெய்வகன்னி பின்னால் நின்று கொண்டிருந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திராவை சேர்ந்த லீலா (வயது 35), சிவம்மா (36), மஞ்சுளா(40), திண்டுக்கல்லை சேர்ந்த பழனியம்மாள்(45), ஓசூர் பகுதியை சேர்ந்த சாந்தி (42), பொன்னாத்தாள் (36), வெள்ளையம்மாள் (48) ஆகிய 7 பேர் கூட்டாகச் சேர்ந்து கூட்டத்தில் நகை திருட முயற்சித்தது தெரியவந்தது.
இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல் வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுகளில் பயிற்சிபெற்று சிறந்த விளையாட்டுவீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கை க்கு மாவட்ட அளவில் 23.3.22 அன்று பெரம்பலூர் மாவட்டவிளை யாட்டு அரங்கத்தில் காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப் பந்து, ஹாக்கி,நீச்சல், டேக் வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து,
டென்னிஸ், ஜீடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை போன்ற விளையாட்டுக் களும், மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக் வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ், ஜீடோ மற்றும் ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுக்களும் நடை பெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டுமற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703516 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிபுரிய ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதிநேர, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு இந்தி, வேதியியல் கணினி அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், சமூக அறிவியல், வரலாறு, புவியியல், உயிரியல், ஆங்கிலம் இந்தி சமஸ்கிருதம் கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கும்.
ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், இந்தி ஆகிய பாடங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கும் மற்றும் உடற்கல்வி, யோகா பயிற்சியாளர், மருத்துவர், செவிலியர், மனநல ஆலோசகர், இசை, நடனம், ஓவியம் மற்றும் கைவினை பயிற்சியாளர்கள், தமிழ் ஆசிரியர், கணினி பயிற்றுனர், அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆண் பெண் உதவியாளர்கள், செக்யூரிடி ஆகிய அனைத்து பணிகளுக்கும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் செயல்முறை தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஆண்டு வரை பட்டியலில் வைக்கப்படுவர். காலிப்பணியிடத்திற்கான வாய்ப்பு ஏற்படும் பொழுது, தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும்.
இத்தகைய தற்காலிக வேலைவாய்ப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன், புதிய கல்விக் கொள்கை குறித்த அடிப்படை அறிவு, கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்றும் திறன், டைப்பிங் போன்ற திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
கரும்புக்கான பரிந்துரை விலையை அரசு அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சர்க்கரை ஆலை கூட்டரங்கில், ஆலை அலுவலர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆலை தலைமை நிர்வாகி தலைமை வகித்தார். தலைமைக் கரும்பு அலுவலர், துணைத் தலைமை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஆலை விரிவாக்கத்திலும், துணை மின் நிலையம் அமைத்ததிலும் தரமற்ற பொருள்களை பொருத்தியதன் விவரப் பட்டியலையும், ஆலை விரிவாக்கத்துக்கு முன், பின் உள்ள நிலையை அடுத்தக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு அரைவைப் பருவத்தில் 4 லட்சம் டன்னுக்கும் குறையாமல் கரும்பு அரைவையை பதிவு செய்ய வேண்டும்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலையை நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரும்புக்கான வருவாய் பங்கீட்டு முறைச் சட்டத்தை ரத்து செய்து, 2021-&22-&ம் ஆண்டுக்கு மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கிட கோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தார்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு, ஜல்லிக்கட்டு பேரவையினரும், கிராம மக்களும் பல லட்சம் ரூபாய் செலவில் பிப்ரவரி மாதம் ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைக் காரணமாகக் கூறி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், கடந்த 1&ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன்பேரில் ரூ. 10 லட்சம் செலவில் பல்வேறு முன்னேற்பாடுகளை விசுவக்குடி கிராம மக்கள் செய்திருந்தனர். இந்நிலையில், போட்டி நடத்துவதற்கு முன்தினம் இரவு எவ்வித காரணமும் கூறாமல் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விசுவக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், ஓரிரு நாள்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குவதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு வாரங்கள் கடந்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்கிட கோரியும் 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தார்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வரும் 26&ந் தேதி விசுவக்குடியிலும், 30&ந் தேதி கள்ளப்பட்டியிலும், ஏப். 3&ந் தேதி அன்னமங்கலத்திலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி அளிப்பதாக அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் 150&வது பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித்தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையினை அறிந்துகொள்ளும் வகையில் இந்த நகரும் புகைப்பட கண்காட்சி அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூரில் துவங்கப்பட்டு தொடர்ந்து தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி பெரம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளி எளம்பலூர், அரசு மேல்நிலைப்பள்ளி குரும்பலூர் ஆகிய பள்ளிகளில் நேற்று காட்சிப்டுத்தப்பட்டது.
இன்று ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி மேலமாத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி குன்னம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி குன்னம், அரசு மேல்நிலைப்பள்ளி வேப்பூர் ஆகிய பள்ளிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும்.
முன்னதாக வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் உட்பட அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
200 பவுன் அடகு நகையுடன் கடைக்காரர் திடீர் ஓட்டம் பிடித்ததால், பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட் டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் கிரா மத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்.பி. மணியிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
கொளக்காநத்தம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தீபக் என்ற பெயரில் நகை அடகு கடை வைத்து தொழில் செய்து வந்தார். கொளக்காநத்தம், அயினாபுரம், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 100&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பண தேவைக்காக அந்த அடமான கடையில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்பொது விளைபொருட்கள் அறுவடை செய்த நாங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகைகளை மீட்க சென்றோம். ஆனால் நகை கடை மூடியே உள்ளது. இது குறித்து அந்த கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டபோது கடை திறப்பார்கள் என பதில் கூறுகிறார்.
ஆனால் கடந்த சில தினங்களாகவே கடை திறக்கவே இல்லை. அதுமட்டு மின்றி கடை உரிமையாளர் தான் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எங்களது 200 பவுனுக்கு மேலான நகை பறிபோயுள்ளது.
எனவே நாங்கள் வைத்த அடமான நகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள் ளனர். மனுவினை பெற்றுக் கொண்ட எஸ்.பி. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பெரம்பலூர் மாவட் டம், ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் கிரா மத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எஸ்.பி. மணியிடம் மனு அளித்தனர். அதில் தெரிவித்துள்ளதாவது:
கொளக்காநத்தம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தீபக் என்ற பெயரில் நகை அடகு கடை வைத்து தொழில் செய்து வந்தார். கொளக்காநத்தம், அயினாபுரம், கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 100&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது பண தேவைக்காக அந்த அடமான கடையில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்பொது விளைபொருட்கள் அறுவடை செய்த நாங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகைகளை மீட்க சென்றோம். ஆனால் நகை கடை மூடியே உள்ளது. இது குறித்து அந்த கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டபோது கடை திறப்பார்கள் என பதில் கூறுகிறார்.
ஆனால் கடந்த சில தினங்களாகவே கடை திறக்கவே இல்லை. அதுமட்டு மின்றி கடை உரிமையாளர் தான் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு கடையை மூடிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எங்களது 200 பவுனுக்கு மேலான நகை பறிபோயுள்ளது.
எனவே நாங்கள் வைத்த அடமான நகையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள் ளனர். மனுவினை பெற்றுக் கொண்ட எஸ்.பி. மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
ஒரே குடும்கருணை கொலை செய்திட கோரி கலெக்டரிடபத்தை சேர்ந்தவர்கள் ம் மனு அளித்துள்ளார்.
பெரம்பலூர்:
பொய் வழக்கு போட்டு மன உலைச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் கருணை கொலை செய்திட கோரி கலெக்டரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் துறை மங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் கணேசன். இவர் தனது மனைவி, மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என் தாயின் நன்னடத்தையை தட்டிகேட்டதால் என் தாய் கனகாம்பாள், எனது சகோதரிகளான சங்கீதா, நிவேதா ஆகியோர் ஒன்று சேர்ந்து என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக ஆர்.டி.ஓ. மற்றும் எஸ்.பி அலுவலகத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காணாமல் என்னை அலைக்கழிக்க விட்டு வருகின்றனர். எனது தாய், சகோதரி மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூட்டு சதியால் நானும், எனது குடும்பத்தினரும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே என் மீது உள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்னின்று தீர்வு கண்டு என்னையும், என குடும்பத்தையும் கூட்டு சதியிலிருந்தும், கூலிப்படை சதியிலிருந்தும் விடுவித்து பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் என்னிடம் உள்ள அரசு ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிடுகிறேன்,
என்னையும், எனது மனைவி, குழந்தைகளையும் கருணை கொலை செய்துவிட வேண்டுகிறேன் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவினை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பெண்ணின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி லெட்சுமி (வயது 65), மகன் கலைவாணன்(44). லெட்சுமி அதே ஊரில் உள்ள அவரது மற்றொரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 18- ந் தேதி அவர் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவரது தாய் லெட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு, முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல், அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, சந்தேகிக்கும் வகையில் அவரது நெருங்கிய உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இதனால் தனது தாயின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலைவாணன் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதனுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் போலீசார் முதற்கட்டமாக லெட்சுமியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர்.
மேலும் லெட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி லெட்சுமி (வயது 65), மகன் கலைவாணன்(44). லெட்சுமி அதே ஊரில் உள்ள அவரது மற்றொரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 18- ந் தேதி அவர் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவரது தாய் லெட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு, முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல், அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, சந்தேகிக்கும் வகையில் அவரது நெருங்கிய உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்தது.
இதனால் தனது தாயின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 28-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலைவாணன் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதனுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் போலீசார் முதற்கட்டமாக லெட்சுமியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர்.
மேலும் லெட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் அருகே எசனை பகுதியில் நாளை (15ம்தேதி) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (15ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
இதனால் அங்கிருந்துமின் விநியோகம் பெறும்கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர்,
வேப்பந்தட்டை,பாலை யூர், மேட்டாங்காடு,திருப் பெயர், கே.புதூர், மேலப் புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மின் கோட் டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தில் நாளை 15ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், பொம் மனப்பாடி, கவுல் பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புது நடுவலூர், ரெங்கநாத புரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி,
நாட்டார்மங்கலம்,மருதடி மற்றும் நீர் உந்த நிலையங் களான அயிலூர், நாரணமங் கலம், காரை, செட்டிக்குளம், பெரகம்பி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.15 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமி திருவீதி உலா நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதன்படி கோயிலில் முக்கிய நிகழ்வான உதய கருட சேவை நேற்று அதி காலை 5:30 மணி அளவில் மங்கள வாத்தியம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
பங்குனி உத்தரதேரோட்டம் வரும் 17ம்தேதி நடைபெறவுள்ளதால் நேற்று தேர்முகூர்த்த கால் பூஜை செய்யப்பட்டு கால்கோள் விழா நடந்தது. இரவு பெருமாள் வெள்ளி கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித் தார்.
விழாவில் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன், ஆடிப்பெருக்கு ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார், காய்கறி கடை சரவணன் உட்பட பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.






