என் மலர்
பெரம்பலூர்
உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் சரிவிகித உணவின் அவசியம் குறித்த போஷன் பக்வாடா முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா கூறியதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 4-ந்தேதி வரை போஷன் பக்வாடா முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 27-ந்தேதி வரை 6 வயது வரையுள்ள ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்டசத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
வருகிற 28, 29 தேதிகளில் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை பரிசோனை முகாம், ஏப்ரல் 2,3 தேதிகளில் பழங்குடியினர் பகுதிகளில் பாரம்பரிய உணவு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஏப்ரல் 4-ந்தேதி போஷன் பக்வாடா நிறைவு விழா நடைபெறும் என்றார்.

குன்னம் அரசு மகளிர் பள்ளியில் மேலாண்மை குழு நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நம் பள்ளி நம் பெருமை -பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்களுக்கான விழிப் புணர்வு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு பேசியதாவது:
பள்ளி மேலாண்மைக்குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு. அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களில் ஒருவர் குழுவின் தலைவராக இருப்பார்.
2 ஆண்டிற்கு ஒரு முறை இக்குழு மாற்றி அமைக்கப்படும். பள்ளி அமைந்திருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் கல்வியில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தன் காரணமாக தற்போது அனைத்து குழந்தைகளும் பள்ளியில் பயின்று வருகின்றனர். பெண் குழந்தைகள் கல்வி பயிலும் வயதில் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.
ஒரு பள்ளியின் செயல் பாடுகள் சிறப்பாக இருந்தால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் ஏற்றம் பெருவார்கள், அதற்கு பள்ளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பள்ளி மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியுடன் உள்ள இடைவெளியை குறைப்பதற்கு இந்த பள்ளி மேலாண்மைக்குழு ஒரு பாலமாக அமையும்.
கடந்த காலங்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் மற்றும் பள்ளியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்கும் மட்டுமே வருகை தருவார்கள்.
அதனை மாற்றி தங்களின் பிள்ளைகளின் தனித்திறமையை கண்டறிந்து எடுத்துச் செல்வதற்காகவும் பள்ளியுடன் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக இந்த பள்ளி கல்வி மேலாண்மைக்குழு அமைக்கட்டுள்ளது என்றார்.

அ.ம.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்ட அ.ம.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன், பொருளாளரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான மனோகரன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் அணி செயலாளர் பழனிவேல், இலக்கிய அணி செயலாளர் இளவரசன், மாவட்ட அவைத் தலைவர் மோகன், தகவல்
தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் கலைவாணன், மதுபாலன் மற்றும் அணி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயக்குமார், ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாடாலூர் வீரமுத்து,
வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்கள் கண்ணுசாமி, வெங்கலம்சேகர், வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் நல்லறிக்கை இளங்கோவன், பெரம்பலூர் நகர செயலாளர் பீமா ரஞ்சித் மற்றும் பேரூர் சிற்றூராட்சி கட்சி உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வரை பற்றி அவதூறாக பேசிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமம், காம ராஜர் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாரூக் மகன் அப்துல் வாஹிப் (வயது 28) பொறியியல் பட்டதாரியான இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபான்மைப் பிரிவு நிர்வாகியாகவும், அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும் உள்ளார். கடந்த 8&ந்தேதி சொந்த ஊருக்கு வந்த வாஹிப்க்கு 13&ந்தேதி தொழுதூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து கடந்த 18&ந்தேதி திருச்சி வழியாக துபாய்க்கு சென்று விட்டார். இந்நிலையில் அப்துல் வாஹிப் அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை யும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசிய வீடி யோவை சமூக ஊடகங்களில் பரப்பியிருக்கிறார்.
இது குறித்து தி.மு.க. நகர இளைஞரணி அமைப் பாளர் அப்துல் கரீம் (38) அளித்த புகாரின் பேரில் அப்துல் வாஹிப் மீது பெரம்பலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோயை தடுக்க தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2ம் சுற்றாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப் பணி மேற் கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையால், 27 குழுக்கள் அமைக்கப் பெற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பு திட்டம் நாளை 21&ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முழுவதும் இலவசமாக போடப்படும்.
எனவே, அனைத்து கால் நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசிகுழு வினர் வரும்போது கன்றுக் குட்டிகளுக்கும் மற்றும் கறவைமாடுகள், எருதுகள், காளைகள், எருமையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனை த்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போட்டுக் கொண்டு விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பவர்கள்பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் நடை பெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று, அனுமதிசீட்டு, இன்சூரன்ஸ் போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து பெரம்பலூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த வாகன சோதனையில் ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்று எப்.சி, இன்சூரன்ஸ் ஆகியஆவணங்கள் முறையாக இல்லாமல் இயக்கப்பட்ட 6 வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, அபராதம் ரூபாய் 42,000 விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
குவாரி அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் சே. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ (வயது 45). இவர், துறைமங்கலம் பகுதியில் குவாரி வைத்து நடத்தி வருகிறார்.
இவரிடம் பெரம்பலூர் நகராட்சியின் 8-&வது வார்டு கவுன்சிலரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளருமான தங்க. சண்முகசுந்தரம், 9-&வது வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியாவின் கணவரும், தி.மு.க. கிளைச் செயலருமான மணிவாசகம் மற்றும் துறைமங்கலத்தைச் சேர் ந்த தென்றல் சரவணன், பிச்சை, அண்ணாதுரை, தங்கவேல் உள்ளிட்ட சிலர்,
குவாரியிலிருந்து லாரிகள் மூலம் லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோபெரம்பலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வி.சி.க. கவுன்சிலர் தங்க சண்முகசுந்தரம், தி.மு.க. கவுன்சிலரின் கணவர் மணிவாசகம் உட்பட 8 பேர் மீது போலீசர் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 8&வது வார்டு பகுதியில் குவாரியிலிருந்து வரும் லாரிகள் எங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என்று அப்பகுதி மக்கள் போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது,
பெரம்பலூர்:
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.
பாலமுருகன் கோவிலில் 42ம் ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் கடந்த 16-ந் தேதி நடந்தது.
இதை தொடர்ந்து பங்குனி உத்திர தினமான நேற்று காலை 7 மணிக்கு ஐயப்பன் கோவிலிருந்து காவடி புறப்பாட்டு வந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணியளவில் திருத்தேரோட்டம் நடந்தது.
முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலைநின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். இன்று (19-ந்தேதி) மஞ்சன்நீர் விடையாற்றி நிகழ்வு நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சுயதொழில் தொடங்க ரூ.2.10 கோடி கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர், வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்.பி. மணி முன்னிலை வகித்தார், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வங்கி கிளையை திறந்துவைத்து பேசுகையில் அவர்கூறியதாவது,
பொது மக்களுக்கு தேவையான கடன் உதவிகளை காலதாமதம் செய்யாமல் தேவையின் அடிப்படையில் விரைந்து வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வங்கி கிளையிலும், தகவல் மையம் அமைத்து மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களின் விவரங்களை விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சுயதொழில் தொடங்குவதற்காக 6 பயனாளிகளுக்கு ரூ. 2.10 கோடி கடன் உதவிக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நீரஜ்குமார் பாண்டா, பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்காக ரூ.2.50 லட்சம் காசோலையினை எஸ்பி மணியிடம் வழங்கினார். விழாவில் சேலம் துணை பொது மேலாளர் பிரசன்னகுமார், மண்டல மேலாளர் ஹேமா மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் 6-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து இரவு வீதிஉலாவும் நடைபெற்றது. 7-ந்தேதி முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காலைமுதல் தண்டாயுத பாணி சாமி கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர். முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, செண்டை வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என பலர் செய்திருந்தனர்.இன்று (சனிக்கிழமை) மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்று மாலையில் தேர் நிலையை வந்தடையும்.

இணைய மோசடியில் இழந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டுபோன மற்றும் காணாமல்போன கைப்பேசிகள் மற்றும் இணையதள மோசடி மூலமாக இழந்த தொகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளார் தலைமையிலான குழுவினர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 30 கைப்பேசிகள் காணாமல் போனதாக அளித்த புகார்களில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 கைப்பேசிகளும், கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் கார்டு மோசடி, இணையவழி விளையாட்டு மோசடி, இணையவழி வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் மூலம் 11 பேர் பணத்தை இழந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ரூ. 1.25 லட்சம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளார் அலுவலக கூட்டரங்கில் பாதிக்கப்பட்டோரிடம் கைப்பேசிகள் மற்றும் மீட்கப்பட்ட தொகையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்தார்.
இதில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான 20 கைப்பேசிகளும், ஆன்லைன் மோசடி மூலம் இழந்து பிறகு மீட்கப்பட்ட ரூ. 1,25,540 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை விபத்தில் வாலிபர் பலி சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், டி.வி.கே நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் நவீன்குமார் (வயது 23). இவர் திருச்சியில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சந்தியா (19) என்ற பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தம்பை அருகே வந்துக்கொண்டிருந்தபோது நிலைதடுமாறி சாலை மையத்தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சந்தியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.