என் மலர்
உள்ளூர் செய்திகள்

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் தேரோட்டம் நடைபெற்ற காட்சி.
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் தேரோட்டம்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் 6-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் தண்டாயுதபாணி சாமிக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து இரவு வீதிஉலாவும் நடைபெற்றது. 7-ந்தேதி முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
காலைமுதல் தண்டாயுத பாணி சாமி கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர். முருகன், வள்ளி-தெய்வானைக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 4.45 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நாதஸ்வர இசை, செண்டை வாத்தியம் முழங்க, வாணவேடிக்கையுடன் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் என பலர் செய்திருந்தனர்.இன்று (சனிக்கிழமை) மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெற்று மாலையில் தேர் நிலையை வந்தடையும்.

Next Story