என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட் உத்தரவின்படி நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 132 ஏரிகள், 1219 குளம், குட்டைகள், 672 வரத்து வாய்கால்களும் உள்ளன.  

    மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு  படி பெரம்பலூர் மாவட்ட நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

    இதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்பான இரண்டு முழு குடியிருப்பு அகற்றப்பட்டது.  

    மேலும் நாரணமங்கலம் மற்றும் குரும்பாபாளையம் கிராமங்களில் உள்ள கருப்புடையார் ஏரி மற்றும் பில்லாலையம் குளத்தில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளான பயிர் செய்யப்பட்டு அறுவடை முடிந்த நிலையில் இருந்த இரண்டு விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி அகற்றப்பட்டது. 


    நீர்நிலைகளில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பெரம்பலூர் செங்குணம் கிராமத்தில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் செங்குணம் கிராமத்தில்  தொடங்கியது. 

    செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த தொடக்க விழாவிற்கு ஊராட்சி தலைவர் சந்திரா தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் மணிவேல், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    முகாமில் எம்.எல்.ஏ. பிரபாகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்து, நீடித்த நிலையான வளர்ச்சியுடைய நீர்வழிப்பகுதி மேலாண்மை மற்றும் நிலவள மேம்பாட்டில் இளைஞர்களின் பங்கு என்ற கருப்பொருள் கொண்ட என்.எஸ்.எஸ். சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில், 

    7 நாட்கள் நடைபெறும் முகாமில் தெருவிளக்கு பழுது நீக்கம் செய்தல், கோவில் மற்றும் பள்ளி வளாகங்களில் உழவாரப்பணி மேற்கொள்ளுதல், நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சரி செய்தல், விழிப்புணர்வு முகாம், மருத்துவ பரிசோதனை முகாம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்தார். 

    தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் கலியபெருமாள் உட்பட பலர் பேசினர். 

    இதில் ரகு, பயிற்சி அலுவலர் அண்ணாதுரை, அலுவலக மேலாளர் மாலினி, சமூக ஆர்வலர் குமார் அய்யாவு மற்றும் ஐடிஐ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  

    முன்னதாக என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பிரேம்குமார் வரவேற்றார்.முடிவில் பயிற்சி அலுவலர் மணிவேல் நன்றி கூறினார்.
    பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.  

    மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசினார்.

    மாநில பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி,  மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயம், மாநில துணைத் தலைவர் துரைசாமி, மாநில மகளிரணி தலைவர் மீனாட்சி நித்யசுந்தர் மற்றும் 496 உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதியுதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதியுதவி மற்றும் வீடு ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியாதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும்.  கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு மேல் இருப்பதோடு  தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்கவேண்டும்.  

    பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது.  அரசின் வேறு எந்த இணை வீட்டு வசதி திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.  ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.  

    வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 20 ச.மீ. வீட்டு மனை இருத்தல் வேண்டும்.  பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டு மனை பட்டா இருக்கவேண்டும். அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டு மனை கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும்.

    தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை வலைதள முகவரியில்  பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    பெரம்பலூர்:

    தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் மாணவர்களுக்கு சென்று சேரும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு அறிவித்த பல்வேறு சிறப்பு அம்சங்கள் மகளிர்களுக்காக செயல்படுத்திய புதிய திட்டங்கள்

    அடங்கிய தொகுப்புகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட அரசு விழாக்களின் தொகுப்பாக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் இன்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வளவன் முன்னிலையில் திறந்துவைத்து பார்வையிட்டார்.

    இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு  நலத்திட்டங்க புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில்  பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள்

    மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை 1000க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    போலி தங்க காசு விற்பனை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள நகை அடகு கடையில் கடந்த   பிப்ரவரி 16 ந்தேதி போலி தங்க காசுகளை  விற்பனை செய்து பணம் பெற்று மோசடி செய்தது  தொடர்பாக கொடுத்த புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை  நடத்தியதில் செட்டிக் குளத்தை சேர்ந்த பால முருகன் (30), லாடபுரத்தை சேர்ந்த வரதராஜன் (33), பெரம்பலூரை சேர்ந்த பிரபு (53), எசனை பாப்பாங்கரையை  சேர்ந்த  சுரேஷ் (33) ஆகியோர் போலி தங்ககாசுகளை விற்று பண மோசடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து வரதராஜன், பாலமுருகன் ஆகிய 2 பேரை ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி கைது செய்து சிறையில்  அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ், பிரபு ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர்.    

    இந்தநிலையில் சுரேஷ், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சுரேஷ் பெரம்பலூர் குற்றவியல்    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    குற்றவாளி பிரபு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
    குன்னத்தில் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பென்னகோணத்தை சேர்ந்தவர்  செல்வகுமார் (வயது 25). இவர் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இதையடுத்து அவரது பெற்றோர், அந்த மாணவியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 

    இது பற்றி டாக்டர்கள் கொடுத்த தகவலின் பேரில் மங்களமேடு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் மேம்பட்ட பொருள்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் முன்னிலை வகித்தார்.

    அமெரிக்க பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமலிங்கம் பெரியசாமி, மேம்பட்ட பொருள்களின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் என்னும் தலைப்பிலும்,   

    புனித யூஜின் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் ரமேஷ், நானோ தொழில்நுட்பத்தின் இன்றையநிலை என்னும் தலைப்பிலும், முதுமுனை பட்ட ஆய்வாளர் செந்தில்முருகன், குறைந்த பரிமாண அமைப்பின் காந்த பண்புகள் என்னும் தலைப்பிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் நா. விஜயன், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் சமூகப் பரவல் என்னும் தலைப்பிலும்,  

    வித்தியகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆராய்ச்சி நெறியாளர் சந்திரமோகன், நீர்த்தகாந்த குறைக் கடத்தி பொருள்கள் ஆராய்ச்சியில் சவால்கள் என்னும் தலைப்பிலும் பேசினர்.

    முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் பாலச்சந்திரன், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ்பாபு ஆகியோர் ஒளியியல் மற்றும் வாயு உணர்திறன் பயன்பாடுகளுக்கு உலோக அயனிகளால் மாசூட்டப்பட்ட காட்மியம் ஆக்சைடு மெல்லிய படலங்களை தெளிப்பு முறையில் உருவாக்குவது என்னும் தலைப்பில் பேசினர்.

    கருத்தரங்கில் சுவரொட்டி மற்றும் வாய்வழி கருத்து பரிமாற்றத்தை மாணவ, மாணவிகள் வெளிப்படுத்தினர்.   நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர்  துரைராஜ், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை  கல்லூரி துணை முதல்வர் கஜலட்சுமி,

    சீனிவாசன் கலைக்கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ரவி, டீன் குமரேசன்,  துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும்  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக துறை தலைவர்  மணிமாறன் வரவேற்றார்.  வணிக மேலாண்மை துறை இயக்குநர் மகேஷ் நன்றி கூறினார். 
    பெரம்பலூரில் பல்வகை உயிரினங்களை கணக்கெடுப்பது குறித்து மகளிர் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தனியார்    ஹோட்டலில்  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களில் தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை  மேலாண்மை குழுவின் மூலம் பல்வகை உயிரினங்கள் கணக்கெடுப்பது தொடர்பாக  

    கிராம மகளிர் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா  மாவட்ட வன அலுவலர் குகனேஷ் முன்னிலையில் தொடக்கி வைத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: ஒரு  கிராமத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் கணக்கெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக இந்த  உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு அமைக்கப் பட்டுள்ளது.

    உங்களது கிராமங்களில் வாழும் சிறு புல் முதல் சிறு பறவைகள் வரை அனைத்தையும்   எவ்வாறு  கணக் கெடுப்பது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.  

    பாரம்பரிய மரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், தோப்புகள்,   கோவில்கள், காடுகள், குளங்கள்,  ஏரிகள், அனைத்து  வகையான நீர் நிலைகள் உள்ளிட்ட  உயிரிப் பல்வகைமை  தளங்களை நிர்வகித்தவைகளையும்,  

    வணிக நோக்கத்திற்காக உயிரியல் வளங்கள் மற்றும் அதைச்சார்ந்த பாரம்பரிய அறிவினை ஒழுங்குப்படுத்துதல், பொருளாதார ரீதியான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    பல  உயிரினங்கள் ஒன் றோடு  ஒன்று  சார்ந்து வாழ் கின்றன. ஆரோக்கியமான  சுற்றுச்சூழலுக்கு   உயிரிப் பல்வகைமை  இன்றியமையாதது. இங்கு வழங்கப்படும் பயிற்சியினை நன்றாக பயிற்சி பெற்று உங்களது கிராமங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், மகளிர் அமைப்புகளிடம் பல்லுயிர் பாதுகாப்பு  குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

    நமது கிராமங்களிலுள்ள அனைத்தையும் அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கு நாம் இன்றே பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற் படுத்த வேண்டும் என்றார்.


    பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க முடியாது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    உலக தண்ணீர் தினத்தையொட்டி, பெரம்பலூர் அருகிலுள்ள வடக்குமாதவியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்துக்குத் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,

    மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படும் ஆய்வகத்தின் மூலம் ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்ததில், குடிப்பதற்குத் தகுதியாக உள்ளதாக சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

    எனவே ஊராட்சிக்குள்பட்ட கிணறு, ஏரி உள்ளிட்டவைகளில் மழைநீரை சுத்தமான, சுகாதாரமான முறையில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். குழாய்களில் வரும் குடிநீரை முறையாக பயன்படுத்திக் கொண்டால், நீர் நிலைகளிலுள்ள நீரை கால்நடைகளின் இதர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி, அலுவலர்களைக் கொண்டு நீர் மேலாண்மையைக் கடைப்பிடிக்க முடியாது என்றார்.
    குவாரியை மூட கோரி கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் ஊராட்சிக்குள்பட்ட திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லுடைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக் கிராமத்திலுள்ள பெருமாள் மலை கிரிவல பாதை அருகேயுள்ள கிணற்று நீரை பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனராம்.

    இந்நிலையில், அந்தக் கிணறு அருகேயுள்ள குவாரியிலிருந்து வரும் புகை மற்றும் மண் துகள்கள் கிணற்று நீரில் படிந்து அசுத்தமாகிறது. இதனால், அந்த கிணற்று தண்ணீரை குடிப்பதால் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    மேலும், அங்குள்ள மற்றொரு குவாரி உரிமையாளர் சுமார் 500 அடி ஆழம் தோண்டி கற்களை எடுத்துவிட்டதால், பொதுமக்களுக்கு வரும் ஏரி தண்ணீர் குட்டையில் தேங்கியுள்ளதாம். அந்த தண்ணீரை குவாரிக்கு பயன்படுத்திவிட்டு, அதன் கழிவுகளை அங்குள்ள ஓடையில் கொட்டுகின்றனராம். இதன் காரணமாக ஏரி நீர் மாசுபடுவதோடு, நச்சுக் கலந்த நீரை பயன்படுத்துவதால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறதாம்.

    மேலும் அனுமதியின்றி செயல்படும் குவாரியிலிருந்து அதிகளவில் கல் உடைத்து எடுக்கின்றனராம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், அனுமதியின்றி செயல்படும் குவாரியை ரத்து செய்து, கழிவுகளை ஓடையில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

    அதிக அளவில் புகை மற்றும் மண் துகள்கள் வெளியேறுவதை த டுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்து விட்டுகலைந்து சென்றனர்.
    இந்தியர்கள் ஊர் திரும்பியதால் மலேசியாவில் தொழில்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளது என்று அந் நாட்டின் முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர்  மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்குமார்.  இவர் தனியார் நிறுவன குழுமங்களின் தலைவராக உள்ளார். இவர் மலேசியாஉள்ளிட்ட வெளிநாடுகளில் எண்ணை நிறுவனங்கள், வணிக நிறுவ னங்களையும்  நடத்தி  வருகிறார்.

    இந்த நிலையில் குமாரை சந்திப்பதற்காக மலேசியா நாட்டின் முதன்மை ஆணையர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது பூலாம்பாடி வந்திருந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மலேசியாவில் 20 மில்லியன் இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். பின்னர்  வந்த  ஊரடங்கு மற்றும்  கட்டுப்பாடுகளால் அதில் 80 சதவீதம்பேர் நாடு திரும்பினர். அதன் விளை வாக மலேசியா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    அதேவேளையில் மலேசியாவில் இந்திய மருத்துவ மாணவர்கள் தங்களின் கல்வியை தொடர்கிறார்கள்.  ஒரு சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை.  

    எங்கள்  நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளில் முழு அளவிலான தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்திய தொழிலாளர்கள்,  சுற்றுலா பயணிகள் தடையின்றி அனுமதிக்கப்பட   உள்ளனர். உக்ரைன் போரில் கூட மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படவில்லை என் றார்.

    பின்னர்  தனியார்  நிறுவன குழும தலைவர் குமார் கூறும்போது, வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் எனக்கு    மலேசியாவில் ஆயில், கியாஸ், கட்டுமான தொழில்கள்   உள்ளன. கொரோனா ஊரடங்கினால் தொழில்கள்      முடங்கின. இருப்பினும்  எனது  மாவட் டம்  மற்றும்  சொந்த  ஊர் மக்களுக்கு எதையாவது செய்ய விரும்புகிறேன். பூலாம்பாடியில் அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் ரூ.10 கோடி செவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறேன் என்றார்.
    ×