என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம மகளிர் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர்  ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    கிராம மகளிர் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    பல்வகை உயிரினங்கள் கணக்கெடுப்பது குறித்து மகளிர் அலுவலர்களுக்கு பயிற்சி

    பெரம்பலூரில் பல்வகை உயிரினங்களை கணக்கெடுப்பது குறித்து மகளிர் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தனியார்    ஹோட்டலில்  பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களில் தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை  மேலாண்மை குழுவின் மூலம் பல்வகை உயிரினங்கள் கணக்கெடுப்பது தொடர்பாக  

    கிராம மகளிர் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா  மாவட்ட வன அலுவலர் குகனேஷ் முன்னிலையில் தொடக்கி வைத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: ஒரு  கிராமத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் கணக்கெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக இந்த  உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழு அமைக்கப் பட்டுள்ளது.

    உங்களது கிராமங்களில் வாழும் சிறு புல் முதல் சிறு பறவைகள் வரை அனைத்தையும்   எவ்வாறு  கணக் கெடுப்பது என்பது குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.  

    பாரம்பரிய மரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், தோப்புகள்,   கோவில்கள், காடுகள், குளங்கள்,  ஏரிகள், அனைத்து  வகையான நீர் நிலைகள் உள்ளிட்ட  உயிரிப் பல்வகைமை  தளங்களை நிர்வகித்தவைகளையும்,  

    வணிக நோக்கத்திற்காக உயிரியல் வளங்கள் மற்றும் அதைச்சார்ந்த பாரம்பரிய அறிவினை ஒழுங்குப்படுத்துதல், பொருளாதார ரீதியான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    பல  உயிரினங்கள் ஒன் றோடு  ஒன்று  சார்ந்து வாழ் கின்றன. ஆரோக்கியமான  சுற்றுச்சூழலுக்கு   உயிரிப் பல்வகைமை  இன்றியமையாதது. இங்கு வழங்கப்படும் பயிற்சியினை நன்றாக பயிற்சி பெற்று உங்களது கிராமங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், மகளிர் அமைப்புகளிடம் பல்லுயிர் பாதுகாப்பு  குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

    நமது கிராமங்களிலுள்ள அனைத்தையும் அப்படியே அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கு நாம் இன்றே பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற் படுத்த வேண்டும் என்றார்.


    Next Story
    ×