என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் சீனிவாசன் கலைக்கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்க தொடக்க விழா நடந்த போது எடுத்த படம்.
பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடை பெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் மேம்பட்ட பொருள்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் முன்னிலை வகித்தார்.
அமெரிக்க பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமலிங்கம் பெரியசாமி, மேம்பட்ட பொருள்களின் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் என்னும் தலைப்பிலும்,
புனித யூஜின் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் ரமேஷ், நானோ தொழில்நுட்பத்தின் இன்றையநிலை என்னும் தலைப்பிலும், முதுமுனை பட்ட ஆய்வாளர் செந்தில்முருகன், குறைந்த பரிமாண அமைப்பின் காந்த பண்புகள் என்னும் தலைப்பிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் நா. விஜயன், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் சமூகப் பரவல் என்னும் தலைப்பிலும்,
வித்தியகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆராய்ச்சி நெறியாளர் சந்திரமோகன், நீர்த்தகாந்த குறைக் கடத்தி பொருள்கள் ஆராய்ச்சியில் சவால்கள் என்னும் தலைப்பிலும் பேசினர்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் பாலச்சந்திரன், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ்பாபு ஆகியோர் ஒளியியல் மற்றும் வாயு உணர்திறன் பயன்பாடுகளுக்கு உலோக அயனிகளால் மாசூட்டப்பட்ட காட்மியம் ஆக்சைடு மெல்லிய படலங்களை தெளிப்பு முறையில் உருவாக்குவது என்னும் தலைப்பில் பேசினர்.
கருத்தரங்கில் சுவரொட்டி மற்றும் வாய்வழி கருத்து பரிமாற்றத்தை மாணவ, மாணவிகள் வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் துரைராஜ், தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை கல்லூரி துணை முதல்வர் கஜலட்சுமி,
சீனிவாசன் கலைக்கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ரவி, டீன் குமரேசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக துறை தலைவர் மணிமாறன் வரவேற்றார். வணிக மேலாண்மை துறை இயக்குநர் மகேஷ் நன்றி கூறினார்.

Next Story