என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது,
பெரம்பலூர்:
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது.
பாலமுருகன் கோவிலில் 42ம் ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் கடந்த 16-ந் தேதி நடந்தது.
இதை தொடர்ந்து பங்குனி உத்திர தினமான நேற்று காலை 7 மணிக்கு ஐயப்பன் கோவிலிருந்து காவடி புறப்பாட்டு வந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணியளவில் திருத்தேரோட்டம் நடந்தது.
முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலைநின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். இன்று (19-ந்தேதி) மஞ்சன்நீர் விடையாற்றி நிகழ்வு நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story