என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கரும்புக்கான பரிந்துரை விலையை அரசு அறிவிக்க வலியுறுத்தல்

    கரும்புக்கான பரிந்துரை விலையை அரசு அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் உள்ள சர்க்கரை ஆலை கூட்டரங்கில், ஆலை அலுவலர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, ஆலை தலைமை நிர்வாகி தலைமை வகித்தார். தலைமைக் கரும்பு அலுவலர், துணைத் தலைமை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், ஆலை விரிவாக்கத்திலும், துணை மின் நிலையம் அமைத்ததிலும் தரமற்ற பொருள்களை பொருத்தியதன் விவரப் பட்டியலையும், ஆலை விரிவாக்கத்துக்கு முன், பின் உள்ள நிலையை அடுத்தக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். 

    அடுத்த ஆண்டு அரைவைப் பருவத்தில் 4 லட்சம் டன்னுக்கும் குறையாமல் கரும்பு அரைவையை பதிவு செய்ய வேண்டும்.

    பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலையை நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கரும்புக்கான வருவாய் பங்கீட்டு முறைச் சட்டத்தை ரத்து செய்து, 2021-&22-&ம் ஆண்டுக்கு மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×