search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தராபுரம் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் நாகராஜபுரம் பொதுமக்கள்
    X

    சுந்தராபுரம் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் நாகராஜபுரம் பொதுமக்கள்

    • பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது.
    • பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் -மதுக்கரை சாலையில், பிள்ளையார்புரம் செல்லும் வழியில் நாகராஜபுரம் உள்ளது. இது கோவை மாநகராட்சி 97-வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    நாகராஜபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மின்சாரம் இல்லை. எனவே அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது.

    இதனால் அங்கு குடிமகன்களின் தொல்லை மட்டுமின்றி கூடவே வழிப்பறி, மிரட்டல் ஆகிய சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.

    எனவே பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இங்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தான் போர்வெல் தண்ணீர் வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நாகராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×