search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளப்பெருக்கை செல்பி எடுக்க திரண்ட பொதுமக்கள்
    X

    பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் பாலத்தின் வழியாக இருகரைகளையும் மூழ்கடித்தப்படி செல்லும் வெள்ள நீரை படத்தில் காணலாம்.

    வெள்ளப்பெருக்கை செல்பி எடுக்க திரண்ட பொதுமக்கள்

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.
    • மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் செல்பி எடுக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

    இதனால் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக இரு கரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்க்கிறார்கள்.

    அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று பாலத்திற்கு வந்து வெள்ளப்பெருக்கை அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை செல்பி எடுக்கின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவிரி ஆற்று பாலத்தில் நெடுகிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு அதிக நேரம் வாகன ஓட்டிகள் பார்வையிட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் பார்வையிடவும் அனுமதிக்கவில்லை.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் சோதனை சாவடி அருகே ஆங்காங்கே புதிய கடைகள் முளைத்துள்ளது. வியாபாரம் களை கட்டுகிறது.

    Next Story
    ×