என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுக்கூரில் இறைச்சி, மீன் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
  X

  மதுக்கூர் ஆற்றுப்பாலம் அருகே மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

  மதுக்கூரில் இறைச்சி, மீன் கடைகளில் குவிந்த பொதுமக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
  • மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

  மதுக்கூர்:

  தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

  இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

  இன்றைய தினம் பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.

  வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு இறைச்சிகளை சமைத்து கொடுத்து உபசரிப்பர்.

  இதனால் எப்போதும் மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.

  அதன்படி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று காலை முதலே இறைச்சி, மீன் கடைகளில் கட்டுகடங்காத கூட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலை, ஆற்றுப்பாலம், வடக்கு மார்க்கெட், மதுக்கூர் மார்க்கெட் என அனைத்து இடங்களிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து தேவையான இறைச்சி கறி, மீன்களை வாங்கி சென்றனர்.

  பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றதையும் காண முடிந்தது.

  மேலும் தற்காலிகமாக இறைச்சி கடைகளும் போடப்பட்டிருந்தன. இதனால் மதுக்கூரில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் அமைந்திருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

  Next Story
  ×