search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முப்பெரும் விழா
    X

    முப்பெரும் விழாவில் சேவை புரிந்தோருக்கு விருது வழங்கப்பட்டது.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முப்பெரும் விழா

    • முப்பெரும் விழாவிற்கு கே.ஆர்.பி.இளங்கோ தலைமை தாங்கினார்.
    • சிறந்த சேவை புரிந்தோருக்கு, விஸ்வநாதன் விருதுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் ஆளுனர் வருகை தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமுதாயத்தில் சேவை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கீழப்பாவூரில் நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், அரிமா மாவட்ட கண்தான ஒருங்கிணைப்பாளருமான கே.ஆர்.பி.இளங்கோ தலைமை தாங்கினார். லட்சுமி சேகர், சசி ஞானசேகர், ஆனந்த், ஜேக்கப் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் தலைவர் பொன்அறிவழகன் தொகுத்து வழங்கினார்.

    உடல் தானம், ரத்த தானம், மருத்துவம், கல்வி,காவல்துறை, முதியோர் உதவித்தொகை, விளையாட்டு துறை, மரக்கன்று நடுதல், பத்திரிகைத்துறை, பனைவிதை விதைத்தல், கனிமவளம், பாரதிக்கு விழா, காமராஜருக்கு விழா, மரக்கன்று வளர்த்தல் போன்ற சிறந்த சேவை புரிந்தோருக்கு, மாவட்ட ஆளுனர் விஸ்வநாதன் விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தையல்எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், சாரண இயக்க மாணவிகளுக்கு சீருடை, நலிவுற்ற, பார்வையற்றோருக்கு உதவித்தொகை மற்றும் அரிசி, சேலைகள் ஆகியன வழங்கப்பட்டன. திருமலைக்கொழுந்து கொடிவணக்கம் செய்தார். ராமச்சந்திரபாண்டி அரிமா வழிபாடு செய்தார். தங்கராஜ் அரிமா கோட்பாடுகளை செய்தார். சுரேஷ் அரிமா குறிக்கோள்களை வாசித் தார். அருணாசலம் செயலர் அறிக்கை வாசித்தார். மண்டலத்தலைவர் மணிகண்டன் அரிமா மலரை வெளியிட, வட்டார தலைவர் செல்வம் பெற்றுக்கொண்டார். முன்னாள் செயலாளர் கலைச்செல்வன் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் .மாவட்ட ஆளுனர் விஸ்வநாதன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார்.விழாவில் வெண்ணிநாடார், ஆனந்த், அருணாசலமுத்துச்சாமி, கவுதமன், ஞானசெல்வன், மதியழகன், ராமசாமி என்ற தமிழ்செல்வன், திருப்பாண்டியராஜ், சிவகுமார், ராஜலிங்கராஜா, சினேகாபாரதி, ஜெயன், முருகேசன், ஜேசுராஜா, ராஜாமணி, சரோஜா, விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×