search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் புதிய பஸ் நிலையத்தில் இருக்கை இல்லாததால் தரையில் அமரும் பயணிகள்
    X

    அன்னூர் புதிய பஸ் நிலையத்தில் இருக்கை இல்லாததால் தரையில் அமரும் பயணிகள்

    • கூடுதல் இருக்கை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரில் அன்னூர் காமராஜர் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த பஸ் நிலையம் கடந்த 2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையமானது கோவை, திருப்பூர், நீலகிரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சத்தி, கர்நாடகா–விற்கு செல்லும் தேசிய நெடுஞ்சா–லையின் ஜங்ஷனாக அமைந்துள்ளது.

    இந்த அன்னூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி, சத்தி உள்ளிட்ட வெளி பகுதிகளுக்கும், அன்னூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் என நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்சில் பயணிக்க கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான கோவை, மேட்டுப்பாளையம் போன்ற முக்கியமான நகரங்களுக்கு செல்வதற்கு என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள்.இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் கூட்டமாகவும், பரபரப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும்.

    கூட்டம் அதிகமாக இருந்தாலும், பயணிகள் வருகைக்கு ஏற்ப பஸ் நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறைந்த அளவிலேயே இருக்கை வசதி உள்ளது. இதனால் பயணிகள் பஸ் வரும் வரை நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகமான பயணிகள் கூடுவதால், அவர்கள் இருப்பதற்கு இருக்கை இல்லாததால் தரையில் அமரும் நிலையும் காணப்படுகிறது.எனவே இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×