என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி. கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
    X

    கோப்புபடம்

    பி.ஏ.பி. கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

    • வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை :

    திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    அணையில் இருந்து துவங்கும் பி.ஏ.பி., பிரதான வாய்க்கால் வெள்ளகோயில் வரை சுமார் 164 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதில் பல இடங்களில் வாய்க்காலில் செடி கொடிகள் படர்ந்தும் ஸ்லாப் கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. பெரிய பாப்பனூத்து, சின்னபாப்பனூத்து பகுதியில் வாய்க்காலே தெரியாத அளவுக்கு செடிகளும் மரங்களும் வளர்ந்து மூடி உள்ளன. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் தடைபடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மரங்களை வெட்டி அகற்றி எளிதாக தண்ணீர் செல்ல வசதி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×