search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்- அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    அமைச்சர் சக்கரபாணியை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்தபோது எடுத்தபடம்.


    தென்காசி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்- அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அமைச்சர் சக்கரபாணியிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    • 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்காக அமைச்சருக்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவ நல்லூர், புளியங்குடி, திருவேங்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயம் மிகப் பிரதான தொழிலாகும். இங்கு அனைத்து பகுதிகளிலும் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது நெல் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், தென்காசி வடக்கு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்துக் கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதை வலியுறுத்தி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் தனது தொகுதியில் 6 லட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைத்ததற்கு ராஜா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராஜா எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சக்கரபாணி விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    Next Story
    ×