search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 10 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை
    X

    முதியோர் உதவி தொகைக்காண ஆணையை மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு வழங்கிய காட்சி.

    நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் 10 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை

    • மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
    • மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    நிகழ்ச்சிக்கு டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமை தாங்கினார். வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு நியமிக்கப்பட்டு மனுக்களை பெற்றார்.

    நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் 10 பேருக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான உடனடி ஆணைகள் வழங்கப் பட்டன. மீதமுள்ள கோரி க்கை மனுக்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் பறக்கும் படை தாசில்தார் சுப்பு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி, சிவில் சப்ளை தாசில்தார் மோகனா, துணை தாசில்தார் நாரா யணன், உமா மகேஸ்வரி, கூடுதல் துணைதாசில்தார் வேல் முருகன், கிராம உதவி யாளர்கள் சண்முக வேலு, முண்டசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×