search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சேரன்மகாதேவி அருகே பி.எச்.பாண்டியன் சிலைக்கு  ஓ.பி.எஸ்.அணியினர் மரியாதை
    X

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி செயலாளர் வி.கே.பி.சங்கர் மாலை அணிவித்த காட்சி. அருகில் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளார்.

    சேரன்மகாதேவி அருகே பி.எச்.பாண்டியன் சிலைக்கு ஓ.பி.எஸ்.அணியினர் மரியாதை

    • நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி புதிய நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு வி.கே.பி.சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாநகர் மாவட்ட செயலாளர் வி.கே.பி.சங்கர் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி மணிமண்டபத்தில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட இணைசெயலாளர் செல்லசித்ரா, துணைசெயலாளர் சரவணன், மகளிரணி துணைசெயலாளர் பால்கனி, பாளை சட்டமன்ற தொகுதி இணைசெயலாளர் சாம்சன் ஆசிர்ராஜ், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜபிரபு, முண்டசாமி, லெனின், இசக்கிராஜா சர்மா, வேல்பாண்டியன், மனோகரன், செல்வகணபதி, செல்வபிரதீப், தமிழ்செல்வி, பாலசுப்பிரமணியன், மகாராஜன், வக்கீல் பீர்முகைதீன், அருள்இமானுவேல், ஜெய்வெங்கட், காஜாமைதீன், கிருஷ்ணன், சுந்தர்ராஜ், காசிவிஸ்வநாதன், ஜெகநாதன் என்ற ஜெகன், துரைப்பாண்டியன், டோமினிக் பாண்டி, நம்பிராஜன், பரமசிவன், பீர்முகம்மது, கந்தையா, லெட்சுமணன், ராமமூர்த்தி, சாம்சன் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×