search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையத்தில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
    X

    நூதன முறையில் மனு அளித்த கோவில் பூசாரி.

    மேலப்பாளையத்தில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

    • கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் ஒருவர் வந்து மனு அளித்தார்.
    • பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.

    நெல்லை:

    மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார்.

    இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் வந்து ஒரு மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கோவிலின் அருகே இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவிலுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலை களம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்மகர்த்தாவுடன் வந்திருந்தனர்.

    மகளிர் மட்டும் பஸ்

    மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து கல்லூரிக்கு மகளிர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×