என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
- படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- கிழக்கு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் கே.ஆர். லேஅவுட்டை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 57). இவர் பில்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கோவை அவினாசி ரோட்டில் பாஸ்போர்ட் ஆபிஸ் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் உதயகுமார் மீது மோதியது. இதில் அவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. மொபட் மீது மோதியதில் கார் நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த முருகானந்தம் (61) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த மற்ற 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து முருகானந்தத்தை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கிழக்கு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.