search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம், புதூரில் 159 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
    X

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய காட்சி.

    விளாத்திகுளம், புதூரில் 159 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

    • விளாத்திகுளம், புதூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

    விளாத்திகுளம்:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விளாத்திகுளம், புதூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார். இதில், விளாத்திகுளம், புதூர் வட்டாரத்தில் 6 மாதம் வரையிலான 159 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. விழாவில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தாஜூன்னிசா பேகம், திலகா, வட்டார மருத்துவர்கள் இன்பராஜ், விபிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், மும்மூர்த்தி, செல்வராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×