search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறும்பலாபேரியில் ரூ.1.76 கோடியில் புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம்.

    குறும்பலாபேரியில் ரூ.1.76 கோடியில் புதிய கால்நடை மருந்தக கட்டிடங்கள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

    • புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருது வழங்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறும்பலாபேரியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்து, ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு கால்நடை மருந்தக கட்டிடங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் நபார்டு நிதியுதவியின் மூலம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கால்நடை மருந்தகங்களின் (மாறாந்தை, வல்லம், ஆய்க்குடி, பொட்டல்புதுார்) புதிய கட்டிடங்கள் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட அரியப்பபுரம் பார்வை கால்நடை மருந்தகம் (கிளை நிலைய கட்டிடம்) திறப்பு விழா நடைபெற்றது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியப்பபுரம் கிராமத்தில் புதிய பார்வை கால்நடை மருந்தகம் மற்றும் புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.

    பின்னர் மீன்வனம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஆணையின் பேரில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விளக்கங்களும், செயலாக்கங்களும், மருத்துவ சேவைகளும் விவசாயிகளின் இருப்பிடங்களிலே வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் 7760 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தென்காசி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 700 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    ஒரு முகாம் நடத்த ஆகும் மொத்த செலவு ரூ.10,000 வீதம் 200 முகாம்களுக்கான மொத்த செலவு ரூ.20,00,000 ஆகும். இன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கால்நடை மருந்தகங்கள் மற்றும் தொடங்கப்பட்ட முகாம்கள் மூலம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் பயனடையும். மேலும் குறும்லாப்பேரி கிராமத்தில் நடைப்பெற்ற முகாமில் சுமார் 700- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம்

    செய்தல் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் கன்று மேலாண்மை, சினை மாடு மேலாண்மை, கறவைமாடு மேலாண்மை, தீவன

    மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வு கால்நடை வளர்ப்போரிடையே ஏற்படுத்தப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருதும், சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் சினை பிடிப்பதற்கு தேவையான சத்துகள் அடங்கிய தாது உப்புகளும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தொலைத்தூர குக்கிரா மங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் மக்களும் பயன்பெறுவார்கள் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், செயற்பொறியாளர் (பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம்) அழகிரிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) (திருநெல்வேலி) தியோபிலாப் ரோஜர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை உதய கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன் பாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கீழப்பாவூர் முத்துக்குமார், கால்நடை பராமாரிப்புத் துறை உதவி இயக்குநர் மகேஷ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம் செல்வி, அனிதா சாந்தி, உதவி பொறியாளர்கள் நிர்மல் சிங், உதய குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் குலசேகரப்பட்டி முத்துமாலையம்மாள் மதிசெல்வன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குலசேக ரப்பட்டி திருவளர்செல்வி சாமிராஜா ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கீழப்பாவூர் முருகேசன், புவனா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×