search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை- சென்னை  ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை கடுமையாக உயர்வு
    X

    நெல்லை- சென்னை ஆம்னி பஸ்களில் டிக்கெட் விலை கடுமையாக உயர்வு

    • நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் ரூ.4,460 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடி வடைந்து பெரும்பாலானோர் தங்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.இதனால் இன்று சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது.

    வால்வோ ஏ.சி. பஸ் டிக்கெட்டுகள் சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இரு மடங்கு விலை உயர்வு ஏற்பட்டு ரூ.4,460 வரை விற்பனையாகிறது. இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏ.சி. பஸ் டிக்கெட் விலை சாதாரண நாட்களில் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,200 முதல் ரூ. 2500 வரை விற்பனை ஆகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×