என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி
- சங்கராபுரம் அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
- ஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அதே பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் இளைய னார் குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருக்கர வாகனத்தில் சென்றார். பின் அங்கிருந்து கீழ்பாடி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். புஷ்பகிரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






