search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டுமன்னர்கோவில் அருகே ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிபெற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூட்டு பிரார்த்தனை
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனை செய்தபோது எடுத்தபடம்.

    காட்டுமன்னர்கோவில் அருகே ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிபெற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூட்டு பிரார்த்தனை

    • இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.
    • ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர்.

    கடலூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்ய சந்திரயான் லேண்டர் விண்கலத்தை அனுப்பியதை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய முடிவு செய்து இதற்காக 'ஆதித்யா- எல்-1' என்ற விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஷதீஷ் தவான் விண்வெளி ஆய்வுக்கூட மையத்தில் இருந்து இன்று ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது.

    இதற்கான 24 மணிநேர 'கவுண்ட்டவுன்' நேற்று 11.50 மணிக்கு தொடங்கியது. இதனை யடுத்து இந்தியா முழுவதும் ஆதித்யா வெற்றியடைய வேண்டி பல்வேறு பிரார்த்த னைகளை மக்கள் செய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னா ர்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ராஜீவ் காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆதித்யா விண்கலம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர். மேலும் இந்த பள்ளியின் தாளாளர் சுதா மணிரத்னம் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு மேலும் இந்தியா பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டி கோவிலில் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

    Next Story
    ×