என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் டிரைவரை வெட்டிய 6 பேர் கும்பல் கைது
- கார் டிரைவரான இவரை நேற்று முன்தினம் பொட்டிரெட்டிப்பட்டி வாரச்சந்தை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர்.
- இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (24).
கார் டிரைவரான இவரை நேற்று முன்தினம் பொட்டிரெட்டிப்பட்டி வாரச்சந்தை அருகே மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொட்டிரெட்டிப்பட்டி வாரசந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அலங்காநல்லத்தை சேர்ந்த சரவணன்(32), விஜய் (27), ஹரிகரன்(43), கருப்பையா(42), நவீன் குமார்(26), கிருஷ்ணமூர்த்தி(32) ஆகியோர் சேர்ந்து ராஜேஷை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






