என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
    X

    வேலூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வேலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    வேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரமத்திவேலூர் அரசு டாக்டர் கோகுல் தலைமையிலான செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் மன ரீதியாக ஏற்படும் மன அழுத்தத்துக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×