என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூர் காவிரி ஆறு சட்டர்ஸ் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.எஸ்.பி. தங்கதுரை அறிவுரையின் பேரில் சீர்காழி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மயில்சாமி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 20 அட்டைபெட்டிகளில் 960 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இதனை புதுச்சேரியிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த திருநள்ளாறு பூமங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபானம் கடத்த பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யாருக்காக மதுபானம் கடத்தி வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த குமாருக்கு சொந்தமான விசை படகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இவர்கள் மீன்பிடித்துக்கொண்டு நாகை துறைமுகத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது நாகை கடற்கரையில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் பைபர் படகு ஒன்று தத்தளித்த படி நின்று கொண்டிருந்தது. இதையடுத்து நாகை மீனவர்கள் அந்த படகு அருகில் சென்று பார்த்தனர். அதில் கைக்குழந்தையுடன், ஒரு தம்பதி உதவி கேட்டு பரிதாபமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களையும், படகையும், நாகை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாகை கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த கடலோர காவல்படையினர், கியூ பிரிவு போலீசார், உளவுத்துறை போலீசார் தம்பதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி மகாரம்பைகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி துஸ்வந்தியதேவர், அவருடைய மனைவி துவாரகா, இவர்களுடைய 1½ வயது குழந்தை கதிதா என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கடந்த 7-ந் தேதி இலங்கையில் இருந்து கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு படகில் உறவினர்களுடன் வந்ததும், அன்று மாலை 4 மணிக்கு கடலுக்கு அருகில் இருந்த பைபர் படகில் தூங்கி கொண்டு இருந்த போது, காற்றின் வேகத்தில் கரையில் நின்று கொண்டிருந்த பைபர் படகு நடுக்கடலுக்கு இழுத்து செல்லப்பட்டதால் கைக்குழந்தையுடன் தத்தளித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கடலோர காவல்படை போலீசார் கைக்குழந்தை உள்பட 3 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிதம்பரம் அருகே சூடியபிள்ளை தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 54). இவர் தமிழ்நாடு மின்சார துறையில் களப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தில்லைகரசி, ஒரு மகள் உள்ளார்.
இவருடைய சகோதரி திருச்சியில் வசித்து வருகிறார். இன்று காலை இவர் திருச்சியிலிருந்து திருவாரூருக்கு ரெயிலில் வந்தார். இவரை பார்ப்பதற்காக குழந்தைவேல் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இன்று காலை 6 மணியளவில் அவர் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை என்ற பகுதியில் வந்த போது குறுக்கே வந்த நாயால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடன் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
மயிலாடுதுறை சின்ன கோட்டையை சேர்ந்தவர் வீரய்யா (42). ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ், சுமன் இவர்கள் 3 பேரும் அயனாவரம் ரெயில்வே மருத்துவமனையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ரமேசும், சுமனும் இரும்பு கம்பியால் வீரய்யாவை தாக்கினர். இதில் வீரய்யாவின் மண்டை உடைந்தது. தகவல் அறிந்ததும் ஐ.சி.எப். போலீசார் விரைந்து சென்று வீரய்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரமேஷ், சுமனை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி வீரய்யா இன்று காலை இறந்தார். இதனால் கொலை முயற்சி, வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பரவையை சேர்ந்த நடராஜன் மகன் அறிவழகன் (வயது 30) ஆட்டோ டிரைவர். இவரும் பெருமகளூரை சேர்ந்த கருப்பையன் மகன் கார்த்திக் (39) என்பவரும் மோட்டார் சைக்கிளில் பரவையிலிருந்து பேராவூரணிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர். அவர்கள் நாகை-திருத்துறைப்பூண்டி சாலையில் தலைஞாயிறு அருகே உள்ள நீர்மூளை என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருணாச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 10–க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது.
இங்கு சீர்காழி ரெட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருஞான அமுதன் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவர் கடையை உள்பக்கம் தாழ் போட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கடைக்குள் பெட்ரோல் ஊற்றினார்கள். பின்னர் தீ வைத்தனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியது. இதனால் விழித்து கொண்ட திருஞான அமுதன் கடையை திறந்து வெளியே வந்தார். அப்போது கடைக்கு முன் ஒரு லோடு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு கிடந்தது.
அவர் கடையை திறந்து வெளியே வர முடியாத அளவிற்கு ஜல்லிகளை கொட்டியதாக கூறப்படுகிறது. கடைக்கு தீ வைக்கப்பட்டது குறித்து சீர்காழி போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.
நிலைய தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த கம்ப்யூட்டர், பிளாஸ்டிக் சேர், மேஜை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கை தீப்பிடிக்க தொடங்கியதும் திருஞான அமுதன் எழுந்து வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் தீயணைப்பு வீரர்களும் சரியான நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் அருகில் இருந்த எலக்ட்ரிக்கல், ஒர்க்ஷாப், ஆயில் கடைகள் உள்ளிட்டவைகள் தப்பியது.
முன் விரோதம் காரணமாக கடைக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது தொழில் போட்டி காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடைக்காரரரை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது தொடுவாய் மீனவர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சந்திரகாசன் (60), ராம்குமார், மணிவண்ணன், வீரச்செல்வம், ராஜா ஆகியோர் கடந்த 7–ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது. அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் உதவியோடு கவிழ்ந்த படகை சரி செய்து அதே படகில் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். ஆனால் மீனவர் சந்திரகாசன் மட்டும் கரை திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கீழ மூவர்க்கரை பகுதி கடலில் 20 நாட்டிக்கல் மைல் தூரத்தில் சந்திரகாசன் உடல் மிதந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் மீனவர்கள் 10 பைபர் படகுகளில் அங்கு சென்றனர்.
கடலில் மூழ்கி பலியான சந்திரகாசன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார் அங்கு சென்று உடலை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் விடுபடாமல் வார்டு வாரியாக சரிபார்த்து வாக்காளர் பட்டியல் தயாரித்திடவும், கடந்த ஜனவரி 1–ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கவும், வாக்காளர் அந்த வார்டை சேர்ந்தவரா என்பதை சரிபார்க்கவும், அலுவலர்கள் 100 சதவீதம் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை முனைப்புடன் செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஷ்ணுபரன், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம் தோப்பு தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் சரவணன் (வயது 29). இவர் தினமும் மது குடித்து வந்ததால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதில் மனமுடைந்த அவர் குத்தாலம் காவிரிச் கரையில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
மயிலாடுதுறை காமராஜர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (52). இவர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பார்சல் பிரிவில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று பழையாறு, தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் பார்சல்கள் மூலம் மீன்களை திருச்சி, சென்னை, பெங்களூரு ஆகிய மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக மைசூர் எக்ஸ்பிரசில் ஏற்ற வந்தனர்.
அப்போது பார்சல் பிரிவு அலுவலர் கணேசன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்சலை பதிவு செய்து அதற்கான ரசீதை மீனவர்களிடம் வழங்க முடியவில்லை.
ரெயில் சரியான நேரத்தில் புறப்பட்டு சென்றதால் மீன்களை அதில் ஏற்ற முடியவில்லை. பின்னர் வாடகை வாகனங்கள் மூலம் வியாபாரிகள் மீன்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மீன் வியாபாரிகள் தென்னக ரெயில்வே திருச்சி முதன்மை கோட்ட அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்த கோட்ட அதிகாரி பார்சல் அலுவலர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை காமராஜர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (52). இவர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பார்சல் பிரிவில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் பழையாறு, தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் பார்சல்கள் மூலம் மீன்களை திருச்சி, சென்னை, பெங்களூரு ஆகிய மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக மைசூர் எக்ஸ்பிரசில் ஏற்ற வந்தனர். அப்போது பார்சல் பிரிவு அலுவலர் கணேசன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்சலை பதிவு செய்து அதற்கான ரசீதை மீனவர்களிடம் வழங்க முடியவில்லை.
ரெயில் சரியான நேரத்தில் புறப்பட்டு சென்றதால் மீன்களை அதில் ஏற்ற முடியவில்லை. பின்னர் வாடகை வாகனங்கள் மூலம் வியாபாரிகள் மீன்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மீன் வியாபாரிகள் தென்னக ரெயில்வே திருச்சி முதன்மை கோட்ட அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்த கோட்ட அதிகாரி பார்சல் அலுவலர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பச்சபெருமாநல்லூர் என்ற இடத்தில் புதுபட்டினம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைகாலிலிருந்து அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரில் வந்த நபர் போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த காரை போலீசார் சோதனை செய்த போது அதில் 58 அட்டை பெட்டிகளில் 2784 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.இந்த மதுபாட்டில்களை போலீசார் கைபற்றியதுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் மதுபானம் கடத்தி வந்த நபர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






